Header Ads



பயணப் பையில் யுவதியின் சடலம் - பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்


கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.

பயணப் பையை வைத்துச் சென்ற நபர் ஹங்வெல்ல பகுதியிலிருந்து அதனை எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் பயணித்த பஸ், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த பஸ் சாரதி மற்றும் நடத்துனரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறித்த நபர் ஹங்வெல்ல பகுதியில் பயணப் பையுடன் பஸ்ஸில் ஏறியதாக வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வௌியாகியுள்ள காணொளியின் அடிப்படையில் சந்தேகநபரை அடையாளம் காணுவோர், பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

0718 591 557 அல்லது 0112 433 333 ஆகிய இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம், கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (01) பகல் பயணப் பையிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் டாம் வீதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.