Header Ads



இலங்கையை கட்டுப்படுத்தும் பாத்பைண்டர் - சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் குற்றச்சாட்டு


- Tamilwin -

ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை தோற்றமைக்கான மிகப் பெரிய சூழ்ச்சியாளர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொழம்பகே என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வசந்த பண்டார, வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொழம்பகே, இலங்கைக்கு எதிரான துரோகி. அவர் பாத்பைண்டர் அமைப்பின் பிரதிநிதி.

ஜெனிவா யோசனைக்கு இலங்கையின் இணை அனுசரணையை பெற்றுக் கொள்ள கொழம்பகே முயற்சித்தார்.

அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இவை பாத்பைண்டர் அமைப்பின் திட்டங்கள். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் பாத்பைண்டர் அமைப்பின் பிரதிநிதிகள்.

அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் இலங்கை தலைவர் மிலிந்த மொரகொட. இந்த அமைப்பே தற்போது இலங்கையை கட்டுப்படுத்தி வருகிறது.

பாத்பைண்டர் அமைப்பு இலங்கையை கட்டுப்படுதுவது என்பது, அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. நாட்டில் ஆட்சி செய்வதற்கு ஈடானது எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. These bunch of idiots already spoiled our country let us tell you the day you stop racism in this country will prosper till then NO GAIN simple

    ReplyDelete

Powered by Blogger.