Header Ads



ஜாயா நகர் குடியிருப்பு, தொல்பொருள் பகுதி என அடையாளமிடப்பட்டது - கிழக்கு ஆளுநர் அலுவலகம் அடாவடி


45 வருடங்களுக்கு மேலாக மக்களால் பராமரிக்கப்பட்டுவந்த குச்சவெளி ஜாயாநகர் சல்லிமுனை பகுதி குடியிருப்பு, தனியார் விவசாய காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் தொல்பொருள் பகுதிக்கான அரச காணி என அடையாளமிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களுக்கு இன்று (03)மக்கள்  முறையிட்டதை அடுத்து இன்று(03) காலை அப்பகுதிக்கு விஜயம் செய்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.

பல வருட காலமாக மக்களுக்கு சொந்தமான காணியை தொள்பொருள் என்ற பேரில் அரச காணிகள் என சுவீகரிப்பு செய்ய முற்படுவது வேதனையளிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த காணி விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தருமாறும் மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments

Powered by Blogger.