Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு, ஏமாற்றியது என்பதை அவதானிக்க வேண்டும் - பிள்ளையான்


- வ.சக்தி -

அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் 

செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார். 

அதேவேளை, பெரும்பான்மையின மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

களுதாவளையில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டிருப்புத் தொகுதியில் இன்னும் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வகிபாகம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் போதாதுள்ளது. வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆசனங்களைப் பெறவேண்டும்.

“கிழக்கில் எமது கட்சியின்ஆட்சியைத் தக்கவைக்கின்ற இளைஞர்களாக அனைவரும் மாறவேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு ஏமாற்றியது என்பதை அவதானிக்க வேண்டும். கடந்த நல்லட்சி அரசாங்கத்திலே தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டார்கள்.

“எனவே, எமது கட்சியின் பாய்ச்சல், எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பாய்ச்சலாக இருக்க வேண்டும். அவ்வாறானவர்களைத்தான் மக்கள் மத்தியிலிருந்து தேல்தல் களமிறக்க வேண்டும். அதற்குரிய உந்துதலை கட்சி வழங்க வேண்டும். மக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

“நாங்கள்பட்ட வேதனைகளையும் கஷ்டங்களையும், எமது தற்கால மக்கள் அனுபவிக்கக்கூடாது. எமது மக்களை வாழ வைக்கக்கூடிய கட்சியாக எமது கட்சியை மாற்றியாக வேண்டும். உள்ளார்ந்த ரீதியில் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படினும், அவற்றைச் சரி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்வது என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும். 

“அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து எமது கட்சியில் ஒருவரைத் தேர்வு செய்வதற்காக வேண்டி செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு என்பது தோற்றுப்போன கொள்கையும் கோட்பாடுமாகும். கால சூழலுக்கு ஏற்ப கொள்கையையும் கோட்பாடுகளையும் மாற்றலாம்” என்றார

No comments

Powered by Blogger.