Header Ads



மட்டக்களப்பில் முஸ்லீம் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு - வியாழேந்திரனின் திட்டமிட்ட செயலா..?


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமத்தினை வழங்கிவைத்தார்.

அதே வேளை குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் கலந்து சிறப்பித்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் முதற்கட்டமாக 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கிவைக்கப்பட்டது. 

இச் செயற்பாட்டினை விரைவுபடுத்தி காணியினை பெற்றுக்கொடுத்தமையினை கெளரவிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன் ஆகியோர் இதன் போது ஊடகவியலாளர்களினால் பொன்னாடை போர்த்து கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கும் காணி வழங்கப்படவில்லை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் ஊடகவியலாளர்கள் அனைவருக்குமே மாவட்ட செயலகத்தில் இதற்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது இருந்தும் முஸ்லீம் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கபட்ட நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் காணி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. It will be interesting to know what action Naseer Ahmed MP, who represents the Batticaloa District, will take to ensure that the Muslim journalists from the Batticaloa District ALSO are allotted lands in the same manner as allotted to Tamil journalists.

    Naseer Ahmed MP, here is your chance to prove that your open support for the Govt. is well founded.

    I also suggest that the Muslim journalists in the Batticaloa District contact Naseer Ahmed MP in this regard so that they may get their due rights.

    ReplyDelete

Powered by Blogger.