Header Ads



அரசுக்குள் இருக்கும் விஷக்கிருமிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் - மைத்திரிபால கோரிக்கை


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு பல கட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

அதில் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான பங்காளிக் கட்சியாக இருக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய எமது கட்சி முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தது.

அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடையவும் எமது கட்சியே பிரதான காரணம். ஆனால், அரசுக்குள் இருக்கும் சிலர் இதை மறந்து செயற்படுகின்றனர். அவர்கள் எங்களை வேண்டுமென்றே தூற்றுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கடந்த காலங்களில் எத்தனையோ சவால்களைக் கடந்துவந்தது.

எனவே, தற்போதைய விமர்சனங்களைக் கண்டு எமது கட்சி பலம் இழக்காது. அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எடுக்கவில்லை. அரசுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம்.

ஆனால், அரசுக்குள் இருக்கும் சில விஷக்கிருமிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பது எமது பணிவான கோரிக்கை" எனத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அரசாங்கம் உங்களை விரட்டினாலும் நிச்சியம் நீங்கள் அதிலிருந்து வௌியேறமாட்டீர்கள். அவ்வாறு வௌியேறினால் செய்த களவுகளும் வண்டவாளங்களும் முழு உலகத்துக்கும் தெரியவரும் என்ற உண்மையை நீங்கள் நன்றாகப்புரிந்து வைத்திருக்கின்றீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.