Header Ads



உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது - பொலிஸார் கூறும் நியாயமானதா..?


நாட்டுக்குள் வஹாபி ஜிஹாத் கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி  ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர், தெமடகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், மோதல்களை உருவாக்கும் வகையிலும்,  குறித்த அமைப்பு சஞ்சிகைகளை வெளியிட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் மூலமாக தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம் என்பவற்றுக்காக பகிரங்கமாக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மிக மென்மை போக்குள்ள அவர், முன்னரும் கைது செய்யப்பட்டிருந்த போதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2 comments:

  1. It is Muslims' responsibility to intentionally seek out resources to learn today's ugly truth of structural racism and how we got to where we are today.

    ReplyDelete
  2. "தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். "
    (அல்குர்ஆன் : 9:32)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.