Header Ads



Mp க்களின் கல்வித் தகமையை அம்பலப்படுத்த முடியாது - நாடாளுமன்ற நிர்வாகம்


நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்த முடியாது என நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவது அந்தரங்க உரிமையை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்று தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகளை அறிந்து கொள்ள முயற்சித்திருந்தது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமையானது அவர்களின் அந்தரங்க உரிமை எனவும், இது பொது விவகாரம் கிடையாது எனவும் நாடாளுமன்றின் துணை செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு கல்வித் தகமை ஓர் அடிப்படை கிடையாது எனவும் வாக்காளராக இருந்தால் மட்டும் போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. No need of divulging the educational qualifications of the parliament members as 99 of them are either illiterate or school drop out cases. So the public of this country do not want to see their forged certificates if there any. Sri Lanka is the only one and only country where the legislators carry no academic qualifications. In the mean time the minimum qualification in Singapore to be a parliament member is that the person must carry the PhD or above. where street roudy is deserved to be a member of parliament in Sri Lanka!.

    ReplyDelete
  2. இதனாலதான் இந்த நாடு பின்னோக்கி வேகமாக செல்கிறது.

    ReplyDelete
  3. இப்படி பாடசாலையை மதிலுக்கு மேலால் கூட எட்டி பார்க்காதவர்கள் எதிர்காலத்தில் கல்வி அமைச்சராக, பொருளாதார அமைச்சராக,சட்ட ஒழுங்கு அமைச்சராக, மற்றும் வெளியுறவு கொள்கை அமைச்சராக அல்லது இந்த நாட்டை கட்டி எழுப்பும் பொறுப்பு வழங்கப்படும் போது, இந்த நாட்டின் எதிர்காலம் எவ்வளவு கீழ் மட்டமானதாக இருக்கும் என்பதை யோசிக்கவே பயமாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.