Header Ads



சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை தலைவர் ஹனீபா காலமானார்

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா காலமானார்

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) 

ஒரு நல்லாசானாகவும் அதிபராகவும் கல்விப் பணியாற்றி சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்கள், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று, பள்ளிவாசல் நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்தி வந்திருக்கிறார்.

ஊரின் நீண்ட கால அபிலாஷையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றத்தை அடைந்து கொள்வதற்காக ஊர் மக்கள் அனைவரையும் பள்ளிவாசல் எனும் ஒரே கொடியின் கீழ் அணிதிரட்டி ஒற்றுமைப்படுத்துவதில் அவர் வெற்றி கண்டிருந்தார்.


No comments

Powered by Blogger.