March 25, 2021

தகனம் - அடக்கம், அரசு இப்போது பிரதிபலன்களை அனுபவிக்கிறது - சம்பிக


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாடாலி சம்பிக ரணவக்க தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.

ஐ.நா.மனித உரிமைகள் தீர்மானத்தை அண்மையில் ஏற்றுக்கொள்வதைத் தடுக்க அரசாங்கம் செயல்படவில்லை.இதன் காரணமாக ஏற்படும் விபரீதங்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இலங்கையர் முழுவதிலும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். 

இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இன்று இந்த செயல்முறை நல்லாட்சியின் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது என்று கூற முயற்சிக்கிறது அரசாங்கம்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கைப் போரில் மோதல் முடிந்த உடனேயே மே 2009 இல் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதன் சர்வதேச குழுக்களின் ஈடுபாடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  காரணமாகவே இது ஆரம்பமானது. அன்று இதன் பொருள் என்ன என்பதை அரசாங்கத் தலைவர்கள் தெரியாமல் தான் உடன்பாட்டிற்கு வந்தார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  

ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது, அதை நாங்கள் வென்றெடுக்க முடியாமல் போனது. போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் விசாரித்து வருந்தோம்.எல்.எல்.ஆர்.சி, பரணகம மற்றும் டெஸ்மண்ட் த சில்வா ஆணைக்குழுகள் உள்ளக பெறிமுறைகளாகும். சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுதியளித்த பின்னர் நியமிக்கப்பட்டன.  இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்தால் அல்ல, ஆனால் அது முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அவ்வப்போது சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் தான். நல்லாட்சியல் தான் ஜி.எஸ்.பி சலுகை மற்றும் ஐரோப்பியவிற்கான மீன் வள ஏற்றுமதியை மீளப் பெறல், நாட்டிற்கு சாதகமற்ற நிலையில் இருந்த தடுக்கப்பட்ட சலுகைகள்,நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணும், பாராளுமன்றத்தின் சுதந்திரத்தைப் பேணுகின்ற, பொதுச் சேவையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடு என்பதை உலகுக்குக் காட்ட நடவடிக்கை எடுத்தோம்.  நாங்கள் ஒரு தவறு செய்தோம், பிரதமர் ரனில் விக்கிரமசிங்க யாரிடமும் கேட்காமல் அப்போதைய 2015 ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கினார்.அது அவ்வாறு செய்யப்படக்கூடாத விடயமாகும். இது காலம் தாழ்த்தும் செயற்பாடகவே அமைந்தது. நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக நாங்கள் முன் நிற்கிறோம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவும், போரில் எடுக்கப்பட வேண்டிய மரபுகளை பாதுகாக்கவும் நாங்கள் மூலோபாயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மூன்று காரணங்களுக்காக அரசாங்கம் இந்த தீவிரமான பிரச்சினையை உருவாக்கியுள்ளது என்பதை தெளிவாகக் கூறுகிறோம். 

சர்வதேச செயல்முறைக்கான ஒரு திட்டம்,  மக்களின் வாக்குகளைப் பெற அரசாங்கம் எப்போதும் உள்ளூர் கதைக்கூடத்தை திருப்திப்படுத்தும் கதைகள்.  உதாரணமாக, இந்தியாவிற்குச் சென்று 13+ ஐ வழங்குவோம், என்று சொல்வது 13 க்கு அப்பால் ஒரு தீர்வு வழங்கப்படும் என்பதானதும் இலங்கைக்கு வந்த பின்னர் பிரிதென்றுமாகும்.பின்னர், மேற்கு நாடுகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என்று பல வதந்திகள் நாட்டில் பரவியிருந்தன. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம் என்றனர் ஆனால் இன்று இந்த அரசாங்கம் மேற்கு நாடுகள் விரும்பியதைச் செய்துள்ளன என்பது கடந்த காலத்திலிருந்தே தெளிவாகிறது.அது அமெரிக்காவின் அனுதாபத்தினால் தான் கோட்டாபய ஜனாதிபதியானார். இன்றைய பிரச்சினைகள் பெரிதாகியுள்ளன. மற்றொரு உதாரணம் தகனம் மற்றும் அடக்கம் சார்ந்த பிரச்சினை இன்றைய நிலையில் உள்ளது. கொள்கை திட்டமின்றி விதிமுறைகளையும் விஞ்ஞான விதிமுறைகளையும் மாற்றி அவ்வப்போது நடைமுறைப்படுத்துவதன் விளைவாக நாம் இப்போது அதன் பிரதிபலனங்களை இந்த அரசு அனுபவிக்கிறது. எங்களுக்கு ஜப்பானின் ஆதரவு இல்லை, தென் கொரியா எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, இந்தோனேசியாவால் உக்ரைன் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற கூட இவர்களால் பெற முடியவில்லை, நேபாளத்தின் ஆதரவும் இல்லை, அரசாங்கத்தின் அன்மைய அடிப்படை உரிமைகள் மீறல்களே இதற்கு காரணம்.கொள்கை திட்டம் இல்லாததற்கு அரசாங்கமே பொறுப்பு.இப்போது நாடு கொள்கை ஒன்றுமில்லாமலே இயங்குகிறது.

போருக்குப் பின்னர் அரசாங்கம் நாட்டை எவ்வாறு நடத்தியது? மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வடக்கிலும் தெற்கிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசாங்கம் செயல்படவில்லை.நானும் இதனால் பாதிக்கப்பட்டவன், நாங்கள் அவர்களை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறோம். மோசடி மற்றும் ஊழல் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன என்பது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், இது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். 

20 ஆவது திருத்தம் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தையும், பொலிஸ் துறையின் சுதந்திரத்தையும், சட்டமா அதிபர் துறையின் சுதந்திரத்தையும் அழித்துவிட்டனர்.இன்று அது ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை ஒழிப்பத்தால் நாட்டில் ஜனநாயகத்திற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.  முடிவுகளை அடுத்த தேர்தலில் காணலாம்.  போரின் போது மக்கள் அவர்களை சகித்துக்கொண்டார்கள், ஆனால் இப்போதும் மக்களை ஏமாற்ற அவர்களிடம்  உபாயங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் போலும். மக்கள் விழிப்பாகவே இருக்கின்றனர்.இன்று நாடும் உலகமும் முற்றிலும் வேறுபட்டவை. 2015 ல் மக்கள் அதை எதிர்த்ததை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.  

மனித உரிமைகள் ஆணையரின் திட்டங்களில் போர்க்கால நிகழ்வுகள் குறைந்த எண்ணிக்கையிலானவையே உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இடம் பெற்றவை.

இன்று,நாட்டின் நிர்வாகம் உலகளாவிய ஊழலுக்கு ஆளாகியுள்ளது, அரச நிறுவனங்கள் அனைத்தும் சரிந்து வருகின்றன. யாரும் வெற்றிபெறவில்லை.ஆட்சியாளரை சூழவுள்ளவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள்தான் இந்தியாவைப் பற்றி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். வெளியுறவு செயலாளர் வெளியுறவு அமைச்சரின் கைப்பாவை ஒன்றை உருவாக்கியுள்ளார்.இன்று அதன் செயலாளர் அமைச்சகத்தை மோசடி செய்பவர்களின் மையமாக மாற்றியுள்ளார்.  இவர்கள் தான் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை கட்டுப்படுத்துகிறார்கள்.இன்று ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி 1980 ஆம் ஆண்டில் இடம் பெற்ற நிகழ்வு சார்ந்த குற்றம் சாட்டப்படவர். கிழக்கு முனையம் வழங்கப்படாததால் இந்தியா வாக்களிக்கவில்லை என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம், ஆனால் இந்தியாவுக்கு ஒரு தூதர் நியமிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன.இன்னும் ஏற்றுக் கொள்கையில்.இது நாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் செயல்பாட்டின் விளைவாகும்.  நாட்டின் மக்கள் முடிவுகளை அனுபவிப்பது ஆபத்தானது. எதிர்காலத்தில் இது அதிகரிக்கப்படலாம். நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு சிக்கல் உள்ளது.  ஜனாதிபதி இது எதிர்க்கட்சியுடன் கூட விவாதிக்கவில்லை. இது ஒரு சர்வதேச பிரச்சினை. மீன் சலுகைகள் குறித்த ஜி.எஸ்.பி சலுகைகள் இழந்தால், ஒரு பெரிய பொருளாதார சரிவு ஏற்படும்.

இன்று நாடு ஒரு பெரிய கடன் வலையில் சிக்கியுள்ளது மற்றும் வெளிநாட்டு நிதிகளில் சிக்கல் உள்ளது. டொலரை இந்த மட்டத்தில் வைக்கக்கூடாது. ஜெனீவா செயல்முறை மூலம் பொருளாதாரத்தில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்படக்கூடும். ஒழுக்கமான, ஜனநாயக மற்றும் நல்லாட்சியின் உயர்ந்த கட்டத்தை நோக்கி முன்செல்வார் என்ற நம்பிக்கையிலயே மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.

2 கருத்துரைகள்:

பொருளாதார தடை மூலம் வளங்கள் கொட்டிக்கிடந்த ஈரான் மக்கள் அனுபவித்த துயரங்களை வெளீநாட்டில் வாழும் இலங்கையர்கள் (கதை கதையாக ஈரானியர்கள் சொல்வார்கள்) மூலம் அறிய முடியும்

நல்ல காலம் சmpikka நீங்க ஆட்சி eல் இல்ல இருந்தா uerudan kolithi இருப்பீங்க

Post a comment