Header Ads



குட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உதவி கோரிய பூனை - மருத்துவர்களுக்கு ஆச்சரியம்


துருக்கி நாட்டில், பூனை ஒன்று அப்போதுதான் தான் போட்ட தன் குட்டிகளில் ஒன்றை வாயில் கவ்வியபடி மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைவதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்த குட்டியை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த பூனைக்குட்டியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம், அந்த பூனைக்குட்டிக்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்திருக்கிறது.

Mother knows best! என்று சொல்வார்கள்.

தன் குட்டிக்கு உடல் நலமில்லை என்பதை ஒரு தாயாக அந்த பூனை புரிந்துகொண்டிருக்கமுடியும் என்றாலும், அதற்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்பது அந்த பூனைக்கு எப்படி தெரிந்தது என்பது ஆச்சரியமே!

உடனே, கால்நடை மருத்துவமனை ஒன்றை அவர்கள் தொடர்புகொள்ள, விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், அந்த பூனைக்குட்டிகளுக்கு சிகிச்சையளித்துள்ளார்கள்.

அந்த பூனை அந்த மருத்துவமனைக்கு வெளியே படுத்திருக்குமாம். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் உணவளிப்பார்களாம். ஆனால், அது குட்டி போட்ட விடயம் யாருக்கும் தெரியாதாம்.

ஆக, உணவளித்து தன்னை கவனித்துக்கொண்டார்கள், தன் குட்டிகளுக்கும் சிகிச்சையளிப்பார்கள் என்று நம்பியிருக்கிறது அந்த பூனை.

விலங்கானாலும், தானும் ஒரு தாய் என்பதை நிரூபித்துவிட்டது அந்த பூனை!

No comments

Powered by Blogger.