Header Ads



தன்னையறியாது நடந்ததாகவும், வலி இருக்கிறதா எனக்கேட்டு அதிகாரி சம்பவதின இரவு என்னை சந்தித்தார்


“எனக்கு நீதி வேண்டும்.இப்படியான அனர்த்தம் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது.” இவ்வாறு தெரிவித்தார் பன்னிப்பிட்டிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் கலைமகன் ப்ரவீன்.

அவர் மேலும் கூறியதாவது,

நான் ஹப்புத்தளை-பிடரத்மலை-கீழ்ப்பிரிவில் வசித்து வருகிறேன். சுமார் 2 மாதங்களாக குறித்த லொறியில் சாரதியாக கடமையாற்றி வருகிறேன்.

பண்டாரவளையில் இருந்து மரக்கறி ஏற்றிய லொறியில் தெஹிவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன்.

இதன்போது பன்னிபிட்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. மின்விளக்கு சமிக்ஞையை கடந்து செல்லும் போது என்னை அறியாமல் திடீரென தூங்கிவிட்டேன். இதன்போது வீதியிலிருந்து விலகிய வாகனம் வீதியோரத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி சென்றதை அறிந்தேன். என்ன செய்வதென்றே எனக்கு புரியவில்லை. ஆனாலும் எப்படியாவது வண்டியை வீதிக்கு திருப்ப வேண்டுமென நினைத்தேன். ஆனாலும் அந்த அதிகாரியின் மீது வாகனம் லேசாக மோதி எல்லாம் முடிந்துவிட்டது.

பின்னர் ஓரிரு நிமிடங்களில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அப்போதுதான் பொலிஸ் அதிகாரிக்கு அருகில் இருந்த மற்றொரு கான்ஸ்டபிள் என் வாகனத்தின் கதவைத் திறந்து என்னை வெளியே இழுத்து தாக்கினார்.

எனக்கு என்ன நடந்தது என்று கூறுவதற்குகூட அவர் வாய்ப்பளிக்கவில்லை. நான் அறியாமல் செய்த தவறுக்காக அப்போது அவர் நடந்துகொண்ட விதம் அருகில் இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை. என்னை கண்மூடித்தனமாக தாக்கினார். என்னை கீழே தள்ளிவிட்டு என்மீது ஏறி பாய்ந்தார். மிதித்தார். அந்த வீடியோவை நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

எனக்கு இப்போது உள்காயங்கள் இருக்கின்றன. அவர் என்னை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்தெடுப்பதற்கு முன்னதாக ஓங்கி குத்தினார். அதிஷ்டவசமாக அது என் முகத்திற்கு ஓரமாக பட்டது. இப்போது நான் மருத்துவமனைக்கு செல்வதற்கு இருக்கிறேன். உடம்பு கடுமையாக வலிக்கிறது.

என்னை தாக்கிய அதிகாரி சம்பவ தினத்தின் இரவு என்னை சந்தித்தார். இப்போதும் உங்களுக்கு வலி இருக்கிறதா? என கேட்டார். தன்னையும் அறியாமல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். எது எப்படியோ எனக்கு நீதி வேண்டும். இப்படியான அனர்த்தம் வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது. – என்றார்

நன்றி தமிழன்

5 comments:

  1. Very Sad.. Need to Punish them all who attacked this Driver...
    May Allah bless him good Health.

    ReplyDelete
  2. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறுகிறார்களே ¡
    விபத்தென்பது தன்னை அறியாமல் நடப்பது தானே,
    தன் குடும்பச்சுமைக்காக இரவுபகலாக தூக்கமின்றி உழைக்கும் அத்தொழிளாலி தான்னை அறியாமல் ஏற்பட்ட விபத்துக்காக அந்த கான்ஸ்டபிள் ஒழுக்கமற்ற வார்த்தைப் பிரயோகத்தூயும் தான்டி மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமா?????????? ��

    ReplyDelete
  3. வேலி யாருக்கு? போலீஸ் police பாதுகாப்பு யாருக்கு? Yellame poaly

    ReplyDelete
  4. Adikkum mattavankkum kandippaaha sattam kadamayai seyya vendum who is that bloody?

    ReplyDelete
  5. இவர் கூறுவதிலேயே இவரின் மிகப்பெரிய தவறு தெரிகிறது சம்பவத்தை நேரில் கண்ட பொலிசாரின் மனநிலையையும் சிந்திக்க வேண்டும்
    இவ்வாறான பொறுப்பற்ற சாரதிதன்மை உயிராபத்தை விலைவிக்க கூடியது


    ReplyDelete

Powered by Blogger.