Header Ads



நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று, பெரும்பான்மையை நிரூபித்தார் இம்ரான் கான்


பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ரஸா கிலானி தோற்கடித்தாா்.

இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.

இதனால், தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்திருந்தார். நேற்று முன்தினம் (04) மாலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, இன்று காலை பாகிஸ்தானின் தேசிய அவை கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையில் 178 வாக்குகளை பெற்று தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை இம்ரான் கான் வௌிப்படுத்தினார்.

பாகிஸ்தான் தேசிய சபையில் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், அதை விட கூடுதலான ஆதரவுடன் இம்ரான் கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

4 comments:

  1. ALHAMDULILLAH. A great leader of a Muslim Nation and a leader loved by all the Muslims the world over and in Sri Lanka, Alhamdulillah. May God AllMighty Allah bleass him for all the endeavours he took to resolve the "burial issues" of the Muslims in our "Mattruboomiya" Sri Lanka.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. அரசியலிலும் நேர்மையாக நடந்து கொள்வதன் விளைவு இது என்பதை இலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் பார்த்து எப்போது பாடம் படிப்பார்கள். ஒருபோதும் பாடம் படிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  4. He is a real gentleman...

    ReplyDelete

Powered by Blogger.