Header Ads



இரணைதீவில் மக்கள் வசிக்காத பகுதியில், மாத்திரமே கொரோனா உடல்கள் அடக்கம் செய்யப்படும்


இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொவிட்19 சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கி கடந்த 25ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது.

அதன் பின்னர் குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

எனினும் இரணைதீவில் கொவிட்19 சரீரங்களை புதைப்பதற்கு எதிராக அந்த பகுதிகள் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.