March 12, 2021

சீனியில் மாத்திரம் 1590 கோடி சூறையாடியுள்ளனர் - ராஜித


இன்று (12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

இன்று அரச வைத்தியசாலைகளில் பாரியளவு மருந்துகளின் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் பல்வகை நோய்களினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வசதி உள்ளவர்களால் இதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமாக இருந்தாலும் தொடராக பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமது மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பாரிய தடைகளை எதிர் நோக்கும் அதே வேளை தமது நோய்களினால் இறக்கும் நிலைக்கும் ஆளாகிவருகின்றனர். அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் நிதி இல்லை. இன்று பல நோயாளிகள் தன்னைச் சந்திக்கும் போது தாம் எதிர் நோக்கும் மருத்துவ தட்டுப்பாடுகள் குறித்து தெரிவித்த வன்னமுள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் தான் சுகாதார அமைச்சராக இருந்த போது பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அத்தியவசிய,மக்களுக்கு மிகுந்த தேவையுடை பல மருந்துகளின், மாத்திரைகளின் பரிசேதனைகளை இலவசமாக வழங்கியதாக தெரிவித்தார்.

இன்று அரச வைத்தியசாலைகளில் பகிர்வுத்(Supply) தொடர் தடைப்பட்டுள்ளது. சாதாரன மக்கள் தமது நோய்களுக்கான சிகிச்சையில் 2 தடுப்பூசிகளை தனியார் துறையில் பொற்றுக் கொண்டாலும் மூன்றாம் தடுப்பூசியை உரிய நோரத்திற்கு   பெற முடியாதவர்களாக உள்ளனர். இலவச மருத்துவத்திற்கு பெயர் போன நாட்டின் நன்மதிப்பை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.தேசப்பற்று அரசாங்கம் என்று கூறி மார் தட்டிக் கொள்ளும் இந்த அரசாங்கம் பொது மக்கள் நலன் சார்ந்து கடந்து ஒன்றரை வருடங்களில் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. இன்று 150 வகையான மாத்திரை மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடுகள் நாட்டில் உள்ளன.கோவிட் சார்ந்து ஆரம்ப நாட்களில் மாயைகளுக்கு பின்னால் சென்றவர்கள் தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒப்புதல் வழங்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக்(Sputnik) தடுப்பூசிகளை தரக்குறைவாகக் கருதியவர்கள் இன்று Sputnik தடு்பூசிகளைக் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளனர்.இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்டதிலும் அரைவாசி தான் கிடைத்துள்ளன. 

அரிசிக்கான டட்லி சிரிசேனவின் விலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத இந்த அரசாங்கம் இன்று சீனி இறக்குமதி வரிக் குறைப்பால் 1590 கோடி நிதியை சூறையாடியிள்ளனர்.

2007-2014 காலப்பகுதியில் அஜித் நிவார்ட் கப்ரால்கள் 1200 கோடி பினை முறியில் சூறையாடினர். 2015-2019 காலப்பகுதியில் இடம் பெற்ற பினை முறி மோசடி 1200 கோடியாகும். இந்த நிதி வங்கியில் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் சீனியில் மாத்திரம் 1590 கோடி சூறையாடியுள்ளனர். இந்த நிதிகளை மீளப் பெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் சட்ட ரீதியாக மேற்கொள்வோம். சூறையாடிய நிதியைப் பெற வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்.சீனி இறக்குமதி வரிக் குறைப்பின் மூலம் நுகர்வோருக்கு ஒரு சதமேனும் இலாபம் கிடைக்க வில்லை. அரசாங்கத்திற்கும் இதன் இலாபங்கள் கிடைக்கவில்லை,அவ்வாறு எனின் இத்தகைய பாரிய நிதி எங்கே சென்றது. நண்பர்கள் கூட்டம் இதை சூறையாடியுள்ளது. “கறுப்பு சீனி வாரம்” ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும்.

கிட்டிய நாட்களில் கேஸ்(Gass) விலையும் 300 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது எனத் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a comment