Header Ads



மோடி வங்கதேசம் சென்றமையால் கலவரம் - 11 பேர் உயிரிழப்பு


வங்கதேச நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பினார். மோடி வருகைக்கு வங்கதேசத்தில்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

மோடி வங்கதேசத்திற்கு வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய  போராட்டக்காரர்கள், ஒரு கட்டத்தில் கடும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

போராட்டக்கார்களை கலைக்க முற்பட்டபோது பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments

Powered by Blogger.