முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு தெளிவான தகுதியை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று -13- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதற்கு எப்போதாவது முன்வந்தால், பெரும்பாலான மக்களுடன் வெளியில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர்.
பசில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்காது இருந்தால், தற்போது அரசாங்கம் ஒன்று இருந்திருக்காது எனவும் குட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1 கருத்துரைகள்:
Very True..
Post a comment