கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்மை முழுமையாக முடக்குவதா என நாளை -15- ஆராயப்படவுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசினை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை நிலையம் நாளை இது குறித்து ஆராயவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்
நாடாளாவிய ரீதியிலான முடக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் அஜித்ரோகண நாளை இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவு நிலைமயை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
1 கருத்துரைகள்:
Puthiya corona
Lanka lock 🔐 down
Imran Khan not coming
Post a comment