February 17, 2021

ஓடிச் சென்று இந்தியாவின் இலவச, தடுப்பூசியை ஏற்றிய ரத்ன தேரர் - எதிர்க் கட்சி கண்டனம்


இன்று(17) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்த கருத்துக்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இவர்கள் கூறிய தேசிய ஆபத்தை மக்கள் கூட சில போது மறந்திருப்பார்கள் போலும்.இந் நாட்டுல் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தோம் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடித்து தன்டை வழங்குவோம் என்றவர்கள் இத்தனை நாட்கள் கடந்தும் மௌனமாக இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை தேசியப் பாதுகாப்புடன் ஒப்பிட்டு படம் காட்டியவர்களின் இன்றைய போக்கு நேர் மாற்றமாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்ப்பட்டதும் பல உறுப்பினர்கள் வரிசையில் நின்றதை கண்டோம். அ்அங்கு சென்று தடுப்பூசிகளை ஏற்றியவர்களின் பெயர் விபரப் பட்டியல் சகல ஊடகங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வேலை நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற அரச ஊடக சந்திப்பின் போது தடுப்பூசி பெற்றீரா என்று உதய கம்பன்பிலவிடம் வினவப்பட்ட கேள்விக்கு ஆம் என்று பதிலளித்தார்.ஆனால் உடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் விபர பட்டியலில் அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.ஆளும் தரப்பு பிரபு குடும்பங்கள் அவர்களுடைய செந்த பந்தங்கள் இந்தியாவிடமிருந்து இலவசமாக கிடைத்த தடுப்பூசிகளை வெட்கம் இல்லாம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பௌத்தனாக வேடிக்கையும் வெட்கமும் என்வென்றால் கொவிட்டுக்கு பயம் இல்லை என்று கூறி தேசிய வாதம் பேசி அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்த ரத்ன தேரர் நேற்று ஓடோடி சென்று தடுப்பூசி ஏற்றியுள்ளார்.இம்முறை அவர் பாராளுமன்றம் வந்ததன் நோக்கம் என்னவோ தெரியாது. 

தேசியவாதம் பேசியவர் இந்தியாவின் இலவச தடுப்பூசியை ஏற்றியுள்ளார். சௌபாக்கியத்தின் தொலைநோக்கின் இரண்டாம் பக்கத்தில் தேசிய செத்துக்களைப் பாதுகாப்பதாகவும் தேசிய சொத்துக்களை விற்க மாட்டோம் என்றும் கருத்தாளமிக்க வசனங்களை கூறியுள்ளனர்.வீட்டில் பிரதிகள் இருந்தால் புறட்டிப் பார்க்குமாறு மக்களை வேண்டிக் கொண்டார்.இன்று அவர்களின் வாக்குறுதிகளுக்கு மாற்றமாக செயறபாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

கிழக்கு முனையம் விற்பனை கைவிடப்பட்டதன் பின்னனியில் இருந்தது இந் நாட்டின் உன்மையான தேச பக்தி பிக்குகளும் தேசப்பற்றுள்ள தொழிற்சங்கங்களுமாகும்.

ஆனால் அரசாங்கம் ஏதோ அவர்கள் தாமாகவே இடை நிறுத்தியது போன்ற ஓர் தோற்ப்பாட்டை மக்கள் மத்தியில் கட்டமைக்க முயல்கின்றனர்.தோல்விக்கு பிறகு மேற்கு முனையம் குறித்து பேசுகிறார்கள்.அந்த உடன்படிக்கையில் மேற்கு முனையம் குறிப்பிடப்படவே இல்லை.

ஹம்பந்தோட்டை துறைமுகம ஒப்பந்தத்தை இல்லாமல் ஆக்கி மீளப் பெறுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று துறைமுகத்தில் இருக்கும் கடற்படை முகாமை நீக்குவதற்கான பூரண சுதந்திரத்தை சீனாவிற்கு வழங்கியுள்ளனர்.அது மாத்திரமல்லாமல் ஹம்பந்தோட்டை துறை முகத்தை சூலவுள்ள 8000 ஏக்கர் இடத்தையும் மொனராகலை வந்தல வரையுள்ள 15000 ஏக்கர் இடங்களையும் சீனாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளனர்.இது தான் தேசப்பற்று அரசாங்கம்.

யாழ்பாணத்தில் மூன்று தீவுகளை சீனாவிற்கு வழங்கியுள்ளதை நேற்றைய ஊடக சந்திப்பில் உதய கம்பன்பில உறுதிப்படுத்தினார்.

இந்தியாவுடன் இப்போது பாரிய சிக்கலை உருவாக்கியுள்ள நிலையில் சீனாவிற்கு இதை வழங்குவதன் மூலம் இது மேலும் உக்கிரமடையும்.இந்த அரசாங்கம் பூகோள அரசியல் சிக்கலில் இலங்கையை இனைத்துள்ளனர்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்னவென்று வினவுகிறோம்? 

திருகோகணமலையிலுள்ள எண்ணெய் களஞ்சியங்களை இந்தியாவிற்கு வழங்க இரகசிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க வந்த அரசாங்கம் வேறு திசையில் பயனிக்கிறது.இந்த உன்மைகளை கூற முடியாமல் பின் வரிசை இளம் உறுப்பினர்கள் ஒழிந்துள்ளனர்.முடியுமானால் ஓடி ஒழிக்காமல் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பு செய்யுங்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு வந்தது இங்கு சிக்கல்களை உருவாக்க அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கு,அந்த வெளிநாட்டு சக்திகளை கையாளும் திறன் அப்போதைய ஆட்சிக்கு இருந்தது என தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

சில வேலை முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவதட்கு RSS,BJP, பயங்கரவாதிகளுடன் டீல் பன்னி பணம்பெற போயிருப்பான்.

Post a Comment