Header Ads



தூரமாகி இருக்கும் சிங்கள - முஸ்லிம் உறவு, மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும் - பிரதமரின் ஆலோசகர்

அடிப்டபடைவாதிகளாலும் ஈஸ்டர் குண்டுத்ததாக்குதல் காரணமாகவும் தூரமாகி இருக்கும் சிங்கள முஸ்லிம் அன்னியோனிய உறவு மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும்.  அதேபோன்று இந்தியா - பாகிஸ்தான் முரண்பாட்டால் கஷ்மீர் மக்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரு  நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரின் ஆலோசகர் கலாநிதி அசேல விக்ரமசிங்க தெரிவித்தார்.

கஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று -05- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜம்மு கஷ்மீர் பிரச்சினை மிகவும் நீண்ட காலமாக இடம்பெறும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கின்றது. ஆயுதம் மற்றும் யுத்தத்தால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த விடயத்துக்காக தொடர்ந்து பிரச்சினை பற்றுக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி கஷ்மீர் மக்களாகும். அந்த மக்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க குரல் எழுப்பவேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் இருக்கின்றது.

மேலும் பாகிஸ்தான் இலங்கைக்கு மிகவும் நட்புகொண்ட நாடாகும். எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பாகிஸ்தான் அரசாங்கம் எங்களுக்கு பாரியளவில் உதவி செய்திருக்கின்றது.

எமது நாட்டில் சிங்கள முஸ்லிம் உறவு அண்மைக்காலமாக சற்று தூரவிலகி இருக்கின்றது. அடிப்படைவாதிகளாலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குல் காரணமாகவும் எமக்கிடையில் இருந்துவந்த சிங்கள முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவரவர் மதத்தை பின்பற்றி நடப்பதற்கு சகல உரிமையும் எமது நாட்டில் இருக்கின்றது.

மேலும் ஒருசில அடிப்படைவாதிகளின் செயற்பாட்டால் மத அடிப்படையில் முறுகல் நிலை அண்மைக்காலமாக  ஏற்பட்டிருக்கின்றது. அந்த நிலைமையை போக்கி, மீண்டும் எமது அன்னியோன்னிய உறவை கட்டியெழுப்பவேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எமது நாடடில் வழங்கப்பட்டிருக்கும் மத உரிமை  உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. 

எனவே எமக்கு எப்போதும் உதவி வரும் பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து இலங்கையர்களாகிய நாங்களும் கஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயாராக இருக்கின்றோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

- நன்றி: வீரகேசரி -


2 comments:

  1. TAMILARGAL ( HINDU-MUSLIM-CRISTIN) ONDRU PADUNGAL. SINGALANAI NAMBAATHEERGAL

    ReplyDelete
  2. Thaj வரலாற்று ரீதியான தகவலுக்கு மாற்றமான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். மீள்பரிசீலனை செய்யவும்.

    ReplyDelete

Powered by Blogger.