Header Ads



(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்



விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும்   என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த அனுமதி வழங்கப்படுவது போலவே, ஏதேனும் நிலைமை தொடர்பாக, மீண்டும் விசேட நிபுணர் குழு  யோசனையை கொடுத்தால், அந்த அனுமதியை ரத்துச் செய்யவும் பின்வாங்க மாட்டோம். 

எந்த ஒருவராலும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுக்கும் இயலுமை எவருக்கும் இல்லை: அரசாங்கம் எடுக்கும் விசேட நிபுணர்கள் எடுக்கும் தீர்மானத்தை எவராலும் மாற்ற முடியாது.


5 comments:

  1. Tough Talk eh? Don't think that you can fool everybody by such bravado. The public knows fully well who is calling the shots. Guys like you are trying very hard to get into the good books of the powers that be with such words.

    ReplyDelete
  2. இப்ப நீங்க என்ன சேர் சொல்ல வாரீங்க.

    ReplyDelete
  3. நான் கீழே விழுந்தேன்
    மீசையில் மண் ஒட்டவில்லை.

    ReplyDelete
  4. சில முக்கியமான விடயங்களை நித்திரையில் இருப்பவர்களுககு சொல்லி விளங்கப்படுத்த முடியாது. அதுபோல் விழித்துக் கொண்டு இருப்பவரகளுக்குக்கூட பல விடயங்களய் புரியவைக்க முடியாது. ஏனெனில் இரு சாராரும் மட்;டைமாடுகள். கொவிட்டினால் இறப்பவரகளின் உடல்களை எரிக்கத்தான் வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வந்ததும் "எடுடா பிடிடா" என்று கூறி எரித்துவிட்டார்கள். இப்போது அவ்வாறு இறந்தவரகளை அடக்கவும் முடியும் என்ற வர்த்தமானி வந்ததும்; அவற்றை அடக்கம் செய்வதற்கு அறிவுறுத்தல் வேண்டும் என்று சொல்கின்றனர். இதனை அரசு சொல்லவில்லை. ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை அரசஅதிகாரிகள் அமுல்நடத்த எவ்வாறான முனைப்புக் காட்டுவார்களோ அவ்வாறே எல்லா வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் அந்த முனைப்பு கொடுக்கப்படல் வேண்டும். அல்லது அச்செயல் இலங்கை தண்டக்கோவையின்' அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம் என்று எழுதப்படிக்கத் தெரிந்த பல கழுதைகளுக்குத் தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவரகள் இன்னமும் இருட்டிற்றான் இருக்கின்றனர். பலவந்தமாகப் பறித்தெடுக்கப்பட்ட உரிமையினை திருப்பிக் கொடுப்பதற்கு என்ன நிபந்தனை வேண்டியிருக்கின்றது. வாயிருந்தால் பேசுவோம். பேனா இருந்தால் எழுதுவோம் நாவு இருந்தால் நக்குவோம் என்ற விவாதம் மலையேறுகின்றது என்பது பல அதிமேதாவிகளுக்கு இன்னமும் புரியவில்லலை.

    ReplyDelete
  5. போடா புன்னாக்கு

    ReplyDelete

Powered by Blogger.