Header Ads



நாங்களும் இந்த நாட்டின் மக்கள், தமிழ் பேசுகின்ற இஸ்லாமியர்களும் இந்த நாட்டு மக்கள் - சுமந்திரன்


எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான இரண்டாம் நாள் போராட்டம் இன்றையதினம் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்களும் இந்த நாட்டின் மக்கள், தமிழ் பேசுகின்ற இஸ்லாமியர்களும் இந்த நாட்டு மக்கள், நாங்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக பேரினவாதத்தை மேலோங்க செய்து தாங்கள் நினைத்தபடி 73 வருடங்களாக ஆட்சி செய்திருக்கிறார்கள்.

அப்படி செய்கின்றபோது எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்றவர்களை பிரித்து ஆளுகின்றார்கள். அப்படி இனி நடக்கக்கூடாது .

தமிழ் பேசும் சமூங்களாக வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட வட, கிழக்குக்கு வெளியே வாழுகின்ற இஸ்லாமிய மக்களும் மலையகத்தில் வாழுகின்ற எமது தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்த மக்களாக இணைந்து பேரணியில் பயணிக்க வேண்டும். இந்த நடைபயணம் எமது ஒற்றுமைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. I'm Also TAMIL. I'm proved to be a Tamil Muslim.

    ReplyDelete
  2. Sumanthiran Iyya you are a decent politician. We are very much obliged to you.

    ReplyDelete
  3. Very good... go ahead towards equality in a united nation. By the way please remember and be aware of splitting maneuvers...

    ReplyDelete
  4. பல இழப்பின் பின்பும் சளைக்காமல் போராடும் தமிழ் சமூகம் உலகில் எந்த மூலையிலும் ஒடுக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. தங்களின் நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. masah allah cangrajilazan

    ReplyDelete
  6. உங்கள் தன்னலம் கருதாத நேர்மையான அரசியல் வாழ்க்கையில் இதுவும் ஒரு மைல் கல்.சரியை சரி என்றும் பிழையை பிழை என்றும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் துணிந்து செயலாற்றும் நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.உங்களைப் போன்றவர்களால் மட்டும்தான் தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி நாடும் வழம் பெறச் செய்யலாம்.உங்கள் முயற்சி வெற்றிபெற என் அன்புநிறை வாழ்த்துக்கள். நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete

Powered by Blogger.