Header Ads



பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம்: சபாநாயகர் கோரிக்கை


தற்போதைய COVID நிலைமை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லை​​யெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை தொடர்பில் 24 ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.

1 comment:

  1. If parliament is not safe what is the better place more safe for the Pak PM. Really a joke

    ReplyDelete

Powered by Blogger.