Header Ads



பள்ளிவாயல்களின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் திரட்டல்


பள்ளிவாயல்கள் எதிர்நோக்கும் பல்வேறு சட்டப் பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றுள் மிகப் பிரதானமானது  பள்ளிவாயல்கள் அமைந்துள்ள காணி உட்பட பள்ளிக்குச் சொந்தமான அசையா சொத்துகளை  உத்தரவாதப்படுத்தும் சட்டமுறையான  ஆவணங்கள் காணப்படாமையை குறிப்பிடலாம்.

 இவ்வகையில் வக்ப் சபையின் வழிகாட்டலின் கீழ் பள்ளிவாயல்களின் அசையாச் சொத்துக்கள் பற்றிய கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வக்ப் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 2350 பள்ளிவாயல்களுள், 1683 மாத்திரமே இதுவரையில் தகவல்கள் வழங்கி பதிலளித்துள்ளன.  ஏனைய பள்ளிவாயல்கள் தமது தகவல்களை தருவதில் தயக்கம் காட்டுகின்றன.

 தகவல் தந்த 99 பள்ளிவாயல்களில் உறுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் 142 பள்ளிவாயல்களில் எந்தவித உறுதியும் இல்லை என அறியக் கிடைத்துள்ளது.  மேலும் 48 பள்ளிவாயல்கள் காணி அனுமதிப் பத்திரத்தை விண்ணப்பித்தாக தெரியவருகிறது.

இந்த வகையில் மொத்தம் 289 பள்ளிவாயல்கள் தமது அசையா சொத்துக்களின் உரிமையை ஆவணப்படுத்த வேணடிய நிலையிலுள்ளன. வக்பு சபையின் சட்ட அலுவலர் இப்பள்ளிவாயல்களின் ஆவணப்படுத்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டவுள்ளார்.

No comments

Powered by Blogger.