Header Ads



கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்


கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள், குறைந்தது ஆறு மாத காலம் நிறைவடையும் வரையில், புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வைத்தியதுறை ஆலோசனை வழங்கயுள்ளது.

புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமாதி ராஜபக்ஷ, கொழும்பில் இன்று -12- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் தன்மையானது, புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துபவர்களிடையே மிகவும் பலவீனமானக இருக்கும்.

எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குறித்த நபர்கள் புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பல மாதங்களுக்கு தவிர்க்கவேண்டும்.

புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துபவர்கள் அந்த பழக்கத்தை கைவிடுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் புகைத்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எங்கப்பா எங்கடா இலங்கை அமைச்சர் பவித்திரா சன்னியாராச்சி

    ReplyDelete

Powered by Blogger.