Header Ads



இந்திய தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இலங்கை - இந்து பத்திரிகை தகவல்


இந்தியா ஜப்பானுடனான உடன்படிக்கையிலிருந்து பின்வாங்க தீர்மானித்துள்ள இலங்கை, மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்;ந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்முனையத்தை தானே அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

முதலீடுகளை மேற்கொள்வதற்காக இதற்கு பதில் மேற்குகொள்கலன் முனையத்தை இலங்கை அரசாங்கம் இநதியாவிற்கு வழங்கும் அரசாங்கத்தின் சிரேஸ்;ட அதிகாரியொருவர் இந்துவிற்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது, இந்த அமைச்சரவை கூட்டத்தில் துறைமுக விவகாரங்களிற்கான அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்குகொள்கலன் முனைய திட்டத்தில் வெளிநாடுகளை அல்லது முதலீடுகளை உள்வாங்குவதற்கு துறைமுக தொழிற்சங்க பணியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலேயே அழுத்தங்கள் அதிகரித்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இது முத்தரப்பு விவகாரம் என்பதால் இலங்கை தன்னிச்சiயாக முடிவெடுக்காது என எதிர்பார்ப்பதாக இந்தியாவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

புதுடில்லியை பொறுத்தவரை கொழும்பின் கிழக்கு கொள்கலன் முனையம் மிகமுக்கிய முன்னுரிமைக்குரிய திட்டமாக காணப்படுகின்றது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் அது இடம்பெற்றிருந்தது.இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் ஜனவரி விஜயத்தின் போதும் இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது.

இந்த விஜயம் இடம்பெற்று ஒரு வாரகாலத்தின் பின்னர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்திய அரசாங்கம் நியமித்துள்ள அடானி குழுமம் கொள்கலன் முனையத்தில் முதலீடு செய்யும் என தெரிவித்தார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கப்போவதில்லை குத்தகைக்கு வழங்கப்போவதில்லை என தெரிவித்த அவர் 2019 ம் ஆண்டின் உடன்படிக்கையை தனது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

எனினும் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கு மத்தியில் ஆளும் ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது போல தோன்றுகின்றது.

துறைமுக விவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சர் சமர்ப்பித்த குழுவின் அறிக்கையினை வெளிநாட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக இலங்கை துறைமுக அதிகார சபையை தொடர்ந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் தெரிவித்தவேளை அரசாங்கத்தின் நிலைப்பாடு மாற்றமடைந்தமைக்கான முதலாவது அறிகுறிகள் தென்பட்டன. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன என கொழும்பிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால் பிரதமரின் கருத்துக்கள் இந்திய தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

இதனை தொடர்ந்தே இந்த சர்ச்சை தீவிரமடைந்த பின்னர் முதல்தடவையாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

1 comment:

  1. சீனாவுக்கு வழங்கபட்ட பகுதியை இரண்டாக பிரித்து அதிலேயே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொடுத்து விட்டால், அவர்களின் ஒவ்வொரு அசைவுக்கு ஏற்றபடி அடுத்தவர் எதிர்ப்பு காட்டுவார். நாம் மூவரிடமும் கடனையும் பெற்று, வாடகையும் பெற்று ஏனைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யலாம். அதற்குள் அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிந்து விடும்.

    இதைதான் அவர்கள் அனைவரும் 30 வருடமாக எமது நாட்டுக்கு செய்தார்கள், இரு தரப்பு பகையை வளர்த்து வியாபாரம் செய்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.