Header Ads



கல்முனை கிரீன்பீல்ட் மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு


(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கிரீன் பீல்ட் மக்கள் கடந்த 5 நாட்களாக தண்ணீர் இடை நிறுத்தப்பட நிலையில் கடுமையான கஸ்டங்களுக்கு உட்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அதிகாரிகாலுடனான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலகத்திலும், ஹரிஸ் எம்.பி யின் காரியாலத்திலும் இன்று(19) இடம்பெற்றது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு இப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நிரந்தரமன தீர்வுத் திட்டம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் அங்கு வசிக்கும் 450 குடும்பங்களுக்கும் தனித் தண்ணீர் மாணி நேரடியாக பொறுத்துவதாகவும்,அதற்கான செலுவுத் தொகையில் 5 இலட்சம் ரூபாவினை ஹரீஸ் எம்.பி தனது சொந்த நிதியில் இருந்து தருவதாகவும்,ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவைப் பணத்தினை மக்களினை உடன் செலுத்த வைப்பதற்கு ஆதன முகாமைத்துவ குழு நடவடிக்கை எடுப்பதாகவும் மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தர் ஏ.சீ.ஏ சத்தார்,எம்.எஸ்.நிசார்,ஏ.எம் பைறோஸ் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை 12ம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.எம் பழீல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிரதேச பொறியியலாளர் எம் வை எல்.எம் சுஹைப்,கல்முனை பிரதேச நிலைய பொறுப்பதிகாரி எம்.எம் முனவ்வர், சிரேஸ்ட சமூகவியலாளர் எம்.எஸ்.எம் சறூக்,கல்முனை கிரீன்பில்ட் ஆதன முகாமைத்துவ குழு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.