Header Ads



ஜனாசா எரிப்பை முடிவிற்கு கொண்டுவர, இம்ரான்கான் வேண்டுகோள் விடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை பகிரங்க கடிதம்


- TL -

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்காள் தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்வதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும், முஸ்லீம்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு முடிவை காணவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் பதில் செயலாளர் நாயகம் ஜுலி வேர்கெர் இம்ரான்கானிற்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை தகனம் செய்யும் கட்டாய நடைமுறையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

சுகாதார அமைச்சு உடல்களை தகனம் செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் அனுமதித்த போதிலும் உலக சுகாதார ஸ்தாபனம் வழிகாட்டுதல்களை வழங்கிய போதிலும்,அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழுவும் ஏனைய நிபுணர்கள் அமைப்புகளும் தகனத்தையும் உடல்கனை அடக்கம் செய்வதையும் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ள போதிலும் அரசாங்கம் உடல்களை தகனம் செய்யும் கட்டாய நடவடிக்கையை பின்பற்றுகின்றது.

முஸ்லீம் சமூகத்திற்கு அளவிட முடியாத துயரத்தை ஏற்படுத்தும் இந்த தன்னிச்சையானது என தோன்றும் கொள்கை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரையில் நம்பகதன்மை மிகுந்த காரணங்களை முன்வைக்கவில்லை.

இஸ்லாமிய கொள்கைகளின் படி உடல்களை அடக்கம் செய்வது ஒரு மனிதரின் இறுதிகிரியைகளில் மிக முக்கியமானது என்பதால் கட்டாயமாக உடல்களை தகனம் செய்வது என்பது நியாயமற்ற,முஸ்லீம் மக்களின் உரிமைகளை மீறும் தேவையற்ற நடவடிக்கை.

உடல்களை பலவந்தமாக தகனம் செய்வது என்பது பாகுபாடு, மூர்க்கத்தனமான தேசியவாதம்,இனச்சார்பு ஆகியவற்றை அடிப்பமையா கொண்ட மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் இது இலங்கையின் முஸ்லீம்களையும் ஏனைய சிறுபான்மையினத்தவவர்களையும் துன்புறுத்துவதற்கு சமமான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவது உள்நாட்டு சட்டங்கள் சர்வதேச மனித உரிமை சட்;டங்கள் மற்றும் நடைமுறைகளிற்கு முரணான விடயம்.

இலங்கைக்கான உங்களுடைய விடயத்தின் போது உடல்களை கட்டாய தகனம் செய்யும் விடயத்தைஇலங்கையின் உயர்மட்ட தலைவர்களிடம் எழுப்புமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம், மிகவும் நெருக்கடியான தருணத்தில் எந்த வித உதவிகளும் அற்றவர்களாக காணப்படுகின்ற முஸ்லீமசமூகத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக இதனை செய்யவேண்டும்.

இலங்கை அரசாங்கம் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்வதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்,முஸ்லீம்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு முடிவை காணவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

3 comments:

  1. Don't stand by stand up against these racial aggressors

    ReplyDelete
  2. Pakistan premier may be given a promise. But will the government really implement?

    ReplyDelete
  3. Will Imran Khan want to visit Sri Lanka after being insulted by the cancellation of his Scheduled Address in the Parliament?

    Don't be surprised if he makes a last minute cancellation.

    ReplyDelete

Powered by Blogger.