Header Ads



ஆங் சான் சூகீக்காக, "ஆங்.. பாவமே" என முன்ன மாதிரி இப்போ நம்மாள அலற முடியாது. வெரி சொரி..!


- Mano Ganesan Mp - 

முன்னாளில் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மார் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகீ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளி விட்டதாம். 

கடந்த காலத்தில் இந்த ஆங் சான் சூகீயை பல்லாண்டுகள் பர்மிய இராணுவம் வீட்டுக்காவலில் வைத்த போது உலகமே அவருக்காக பரிந்து பேசியது. 

இப்போது அத்தகைய பரிவை ஆங் சான் சூகீ எதிர்பார்க்க முடியாது. 

காரணம், பெளத்த நாடான மியான்மரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களை, இதே இராணுவம் படுகொலை செய்தபோது, அதற்கு எதிராக உலகம் அணி திரண்ட போது, அப்போது நோபல் பரிசு பெற்றிருந்த இந்த ஆங் சான் சூகீ என்ற பர்மிய பெண் அரசியல் தலைவர் நியாயம் தவறி தனது நாட்டு இராணுவத்தின் பர்மிய பெளத்த இனமத வெறியை கண்டிக்க தவறியதுடன், ஒடுக்கப்பட்ட அப்பாவி  ரோஹிங்யா முஸ்லிம்களையே குற்றம் சாட்டினார். 

அவருக்கு நோபல் பரிசு வழங்கி அங்கீகரித்த உலக ஆதரவை,  நடுநிலைமை தவறியதால் இவர் இழந்தார் என்றும் சொல்லலாம்.

பர்மாவில் ஜனநாயகம் வீழ்ந்து, இராணுவ சர்வாதிகாரம் மேலோங்குவதை கடுமையாக எதிர்ப்போம். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

ஆனால், ஆங் சான் சூகீக்காக, "ஆங்.. பாவமே" என முன்ன மாதிரி இப்போ நம்மாள அலற முடியாது. வெரி சொரி..!

இலங்கை என்ற ஸ்ரீலங்காவுக்கும், பர்மா என்ற மியான்மாருக்கும் இடையில் பற்பல ஒற்றுமைகள் உள.   

இங்கேயும் இப்படி நடந்தால், உயிரை துச்சமாக கருதி எதிர்ப்போம். ஆனால் எந்த தனி நபருக்கும் பரிவு காட்ட முடியாது. அப்படி பரிவு காட்ட இங்கே தேசிய தலைவனோ, தலைவியோ கிடையாது..!

3 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் இயற்கை உலகத்தைச் சரியாக இயக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொன்றும் இயற்கையைச் சமநிலைப்படுத்தத் தேவைப்படும் நேரத்தில் நடைபெறும். இல்லையேல் சமநிலை தவறி உலகம் அழிந்து விடும்.

    ReplyDelete
  2. இப்படியான ஒரு தலைவர் முஸ்லிம் சமூகத்திற்கு எப்போது கிடைப்பார். இருந்த ஒருவரும் போய்விட்டார். அரசியல் தலைமை என்பது ஒரு இனத்திற்கானது மாத்திரமல்ல. முழு நாட்டிற்குமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்குமானது. மனோ கணேஷன் ஐயா அவரகள் இந்த வகையில் முழு மக்களுக்குமானவர். ஏனைய இனங்களின் தலைவர்கள் முஸ்லிம் இனத்திற்காகக் பலத்த குரல் கொடுப்பது துரஷ்திஸ்டமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.