February 16, 2021

ஜனாசாக்களை அடக்கவே 20 க்கு ஆதரவளித்தோம், SJB துரோகம் செய்தது, மரிக்கார் வாய்மூட வேண்டும் - நஸீர்


ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஒரு தேசியப்பட்டியலையேனும் வழங்காமல் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குப் பாரிய துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபதாவது திருத்தத்தை ஆதரித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களை விமர்சித்த மரிக்கார் எம்பிக்குப் பதிலளிக்கும் வகையில், அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலே  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி ஹாபிஸ் நஸீர் எம்பி தெரிவித்ததாவது:

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் பற்றி விமர்சிக்குமளவிற்கு, சூனிய அரசியல் செய்யும் எந்தவித  அரசியல் ஞானமுமற்ற,  மரிக்கார் எம்பிக்கு அறிவு இருக்குமென நான் நினைக்கவில்லை. 

தனித்துவ கட்சியின் ராஜதந்திரங்களை தெரிந்து கொள்ளும் அறிவும் மரிக்காருக்கு இல்லை. வெறும் அபிவிருத்தி அரசியல் கோஷம் செய்யும் மரிக்கார் எம்பி, உரிமை அரசியலுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது.

வடக்கு கிழக்கின் மேய்ச்சல் தரைகள் பறிபோவது பற்றியும் இவருக்குத் தெரியாது. திட்டமிட்டவாறு காணிகள் பறிபோவதால், ஏழை விவசாயிகள் படும் அவஸ்தையும் மரிக்காருக்குப் புரியாது. அரச உயர் பதவிகளில் சிறுபான்மை இனத்தவரை உள்வாங்குவதற்காக, நாங்கள் எதிர் நீச்சலடிப்பதும் இந்த எம்பிக்கு விளங்காது.நவீன குளியலறையில் குளிக்கும் மரிக்கார், வாய்க்கால், வரப்பு, நீர்ப்பாய்ச்சல், விவசாயம் பற்றி எதுவும் தெரியாதவர்.

பேரினவாதத்துக்கு மட்டும் சாமரம் வீசும் மரிக்கார் எம்பி, சிறுபான்மை அரசியலின் அபிலாஷைகள் பற்றி நன்கு படித்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்துவிடும்.சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் இலட்சணத்தில் உள்ள கட்சியில் இருக்கும்  மரிக்கார் எம்பி, எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வார். 

இருபதை ஆதரித்ததன் நோக்கத்துக்குப் பின்னால் சமூகங்களுடனான இணக்கப்பாடு உள்ளது. இதை, மரிக்கார் புரிந்து கொள்ளல் அவசியம். ஏனைய சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுதல் மற்றும் அந்நியப்படும் நிலைமைகளை இல்லாமல் செய்யும் சிந்தனைகளும் இந்த ஆதரவில் உள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்புக்கான உத்தரவாதம்,  ஜனாசாக்களை அடக்குதல் ஆகியவையும் இதில் தங்கியுள்ளன. அதுமாத்திரமன்றி இழந்துபோன முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசல் சக்தியை வேறு வகையில் நிரூபிக்கும் இராஜதந்திரங்களும் இதில் உள்ளன. மரிக்கார் எம்பி இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடின் புரியும் வரை வாய்மூடி இருக்க வேண்டும் என்றும் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

21 கருத்துரைகள்:

I kindly request (please please pLease) Jaffna Muslim to not to publish anything related these munafiqs.
Do not raise our blood pressure.

இவருக்கு மரிக்காரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இவர் போன்ற காசுக்காகவும் இன்னும் பல சுய தேவைகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக முழு சமுதாயத்தையும் காட்டிக்கொடுத்த இந்த நயவஞ்சகனுக்கு வாக்களித்த மக்கள் அதற்காக வெற்கப்படவேண்டும். இவர் 20க்கு வாக்களிக்கும் தருணத்தில் பாராளுமன்றில் நடந்துகொண்ட விதம் இன்னும் மக்களுக்கு நினைவிருக்கிறது. இவர் போன்ற நயவஞ்சகனுகளை தோற்கடிக்காமல் எமது சமுதாயம் என்றுமே வெற்றிபெற முடியாது.

Sari ithellaaammm yaaru seiraaango.... SJB ya illaa neeenga potti vaaangina 20+ mottuvaaa.... Conjamaavathu....???

Also, thesiya pattiyal visayatthil niyaayam irunthaalum, unga ellorayum kooppittu pesi etherkkaagaha athanai tavirkka vendumnu sonnaaathaaane baavaa... You must know that Mottu vin arasiyal SLMC+ACMC ya singahala makkalidam vittuttaaan 63+ vote eduttaaanuga baava... SLMC+ACMC tanittu ketturunthaal, ippothaikki, SJB ku at;east 100M+ MPs irunthurukkum...do u know that?? Conj pottiyave mattum yosikkaama Kidneyayum yosikka venga baava

Athilla baava, eppa irunthu SJB ku ethiraa musligala ani thiratta poreengalo.... Eppa SLMC thalaivaaraaga thittamo...??? jock pannaama ponga baava..ponga

This guy is a deal maker from beginning. He will do anything for money. A curse to entire Muslim community.

Dear EXPOSER,
Not only this guy, the entire Muslim parliamentarians who supported the "Yahapalana Government" and the so-called Civil Society Muslim ledears and the ACJU "ARE A CURSE TO ENTIRE MUSLIM COMMUNITY. These fellows should be chased away from the Muslim political playing field soon, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

ivar therivu seyyappatta aduttha kaname kurangu velayyay thuwanginar.
Eravur Kurangu.

ivar therivu seyyappatta aduttha kaname kurangu velayyay thuwanginar.
Eravur Kurangu.

You shut up. Entire people know your 'najees' mouth reflecting munafiq ideology.

This must not be allowed talk.all the deals done secretly and they really sold them for money. Everyone knows who these people are. People never voted them to support the pohottwa or the 20th amendment. Even after voting 20th amendment they are not able to sort the burial issue. They talk big. Bloody onions. They must work according to the mandate people gave them. They sold whole of Muslim community. Shameless lot.

@Noor Nizam you also just shut up your bloody mouth idiot there's traitor among our muslim community like poweful virus like you.first of all we all Muslims should completely clean from society.now a days many munafiqs are roaming the name of Muslims,or convener of muslim voice.

அரிசி பேக்கும் ஆயிரம் ரூபாய் காசும் கொடுத்து அப்பாவிகளின் வாக்குகளை களவாடி வந்த காங்கிரஸ் நசீருக்கு அருகதை உண்டோ மரக்காரை விமர்சிக்க?

தல இருக்க வால் ஆடக்கூடாதூ

வெட்கம் கெட்ட கேடு கெட்ட சமூகத்தை ஈடுவைத்து பேராசை அரசியல் நடாத்தும் இது போன்ற புல்லுருவிகளுக்கு வாக்குக் கொடுத்த பொதுமக்களை முதலில் தண்டிக்க வேண்டும்.

Naseer Ahmad MP

Please stop insulting MPs from other Parties. You seem to be opening your mouth ONLY to insult MPs from other Parties or to Justify your FAILURES or WRONG actions.

I have 2 simple questions.

1. 4 of the 5 SLMC MPs voted for 20A while the other MP, the SLMC
leader, voted against. Was it the Party decision for 4 MPs to vote
in favour of 20A and the Leader to vote Against? What is the reason
for that?

2. The Most important reason for your voting in favour of 49A is your
claim that the Govt. agreed to Stop Cremation of Corona victims and
permit Burial. No doubt, it is a good reason. But If we are to
believe you, you must explain why the SLMC leader voted against 20A?

கிளட்டு கபர வேசாமவன்

கிழட்டு கபர வேசாமவன்

Post a Comment