Header Ads



ஜனாஸா எரியூட்டல் விவகாரம், சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது - SLMC




கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களுக்கு (ஜனாஸா) பலவந்தமாக எரியூட்டிவரும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாதெனவும், அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்தி, நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் அறிக்கை விடுத்த உடனேயே , அதனை வரவேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இரண்டு ட்விட்டர் பதிவேற்றங்களை மேற்கொண்டிருந்தார்.

முதலாவது, ட்விட்டர் பதிவில், கொவிட் - 19 தொற்றாளர்களின் சடலங்களுக்கு (ஜனாஸா)பலவந்தமாக எரியூட்டுவதை கைவிட்டு நல்லடக்கம் செய்வதற்கான மாற்றுத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் நால்வர் அடங்கிய ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிக்  குறிப்பிட்டு, அந்த அறிக்கையையும் முழுமையாக இணைத்திருந்தார்.

அடுத்த ட்விட்டர் பதிவில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட்க்கு நன்றி தெரிவித்து, இலங்கையில் மரணிக்கும் கொவிட் தொற்றாளர்களின் ஜனாஸாக்களை பிற நாடொன்றில் (மாலைதீவு) அடக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக ஏற்படக் கூடிய மனித உரிமை மீறலின் பாரதூரத்தை அவரது நாட்டு மக்களுக்கு உணர வைத்ததற்கான அன்னாரின் நடவடிக்கையை சிலாகித்துக் கூறியிருந்தார்.அஹமட் ஷஹீட் மாலைதீவின் முன்னாள் வெளிநாட்டமைச்சராகக் கடமையாற்றியவர் ;முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர்.

இவ்விரு ட்விட்டர் பதிவுகளையும் கடந்த கடந்த செவ்வாய்க் கிழமை( 26 ), முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஒன்றன் பின் ஒன்றாக பதிவேற்றம் செய்திருந்தார்.அவற்றை இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் முக்கியஸ்தர்கள் பலர் பார்வையிட்டுள்ளதோடு,அவற்றிற்கு பின்னூட்டல்களையும் இட்டிருந்தனர்.

இலங்கையில் பலவந்த ஜனாஸா எரியூட்டல் தொடர்கின்ற நிலையில் ,பிரஸ்தாப விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை முன்னரை விடவும் வெகுவாக ஈர்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.


5 comments:

  1. What have you and your Party done in this matter which has been a matter of indescribable Grief and Suffering for the Muslim Community as a whole for nearly a year?

    You think it is a Big Deal to reproduce the Comments of Concerned Foreign Parties after more than 125 INNOCENT Muslim Janazas have been Cremated?

    Fact is, you and your SLMC have TOTALLY FAILED the Muslims of Sri Lanka. You and those in the Party leadership should GO HOME. Are you waiting till Ranil Leaves the UNP? He had a Mission and that was to Finish Off the UNP. Do you want to do the same thing for the SLMC? If you wait till the Next Elections, there is a strong possibility that you might do just that which could make Ranil feel relieved that even in ignominy he has followers!

    By the way, where is the Action you Promised against your MPs who Defied you and Voted for the 20A? Did you actually permit them to vote
    according to their conscience as they claimed after voting though you vehemently denied it? Who knows? May be they are telling the truth and probably have the evidence to prove their claim.

    ReplyDelete
  2. விடுங்கப்பா

    அவரவருக்கு இயலுமானதைத்தானே செய்யலாம்.

    ReplyDelete
  3. சும்மா போங்க ஹக்கீம் நானா ஜோக் அடிக்காம

    ReplyDelete
  4. நம்மிட றவுபு தம்பிட பயங்கர கண்டுபிடிப்பு

    ReplyDelete
  5. I think over 200 Janazas creamated so far and not only SLMC but entire Muslim community failed. In this matter everybody raised their voice and now this has gone to UN because Sri lankan government has not given solution to this. Now we have to unite without blaming each other to get our fundamental right of burial.

    ReplyDelete

Powered by Blogger.