Header Ads



தம்மிக்கவின் பாணியை குடித்தும், பவித்திராவுக்கு கொரோனா ஏற்பட்டு விட்டது - Dr சேனாரத்ன


இன்று (24) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

கொவிட் பரவல் இன்று 25 மாவட்டங்களிலும் பரவிக் கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் சகல மாவட்டங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டவன்னமுள்ளனர்.278 மரணங்கள் நேற்று இரவு வரையில் பதிவாகியுள்ளது.மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளது.மரண எண்ணிக்கையில் ஏதோ மறைவான நிலைப்பாடு இருப்பதாக ஒர் விடயம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட வன்னமுள்ளது.பரவலின் உச்ச கட்டமாக சுகாதார அமைச்சருக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளது.முட்டி போட்டு, தம்பிக்கவின் பானி அருந்திக் கூட அவருக்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் 11 பேருக்கு தொற்று ஏற்ப்ட்டும், 70 க்கும் அதிகமானவரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே சுகாதார அமைச்சுக் கூட இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்ட தொற்றை நேற்று பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்ட விதம் இந்த நாட்டில் பானி அருந்தி, ஒர் கோத்திர யுகம் இருப்பதான ஒர் செய்தியை வெளியிட்டன. இவ்வாறான செய்திகள் அபிவிருத்தி அடையாத ஆபிரிக்க நாடுகளிலிருந்து தான் கோள்விப் படுவோம்.இலவச கல்விக் கொள்கை கொண்ட ஒர் உன்னத நாட்டில் இவ்வாறான விஞ்ஞான விளக்கங்கள் அற்ற பானிகளைக் கொண்டு இன்று நாட்டை சர்வதேசத்திலிருந்து ஒதுக்கும் நிலையை ஏற்படுத்தியிள்ளனர்.மறுபக்கம் பௌத்த தர்மத்தையும் கொச்சைப்படுத்தியுள்ளனர்.

கோத்திர சமூகம் இன்று விஞ்ஞானத்தை விட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தம்பிக்க பானம், கிரிதல பானம், சன்ன ஜயசுமன கொண்டு வந்த சுதர்ஷனி பானம் என்று பல பானங்களைக் கொண்டு வந்தனர்.இவ்வாறான செயற்பாடுகளால் சன்ன ஜயசுமனவின் கலாநிதிக் கற்கையை பலர் கேள்விக் குட்படுத்தியுள்ளனர்.21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தையும் பௌத்த தர்மத்தையும் இவர்கள் தகமைப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர்.புத்த பெருமானுக்கு ஏற்ப்பட்ட முதுகொலும்பு நோய்க்கு அ்அன்று அவர் வைத்தியர்களைக் கொண்டு தான் சிகிச்சை பெற்றார்.காளிகளுக்கும், சூனியக்கார்ர்களுக்கும் பின்னால் சென்று சிகிச்சை தேடவில்லை.

விஞ்ஞான ரீதியான பல தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுத்தி அங்கீகாரம் வழங்கியுள்ளது.தடுப்பூசி கொள்வனவு குறித்து பல சந்தர்பங்களில் நான் பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன்,இறுதியாக வரவு செலவுத் திட்ட உரையிலும் கூறியிருந்தேன்.332 மில்லியன் தொகை கொண்ட அமொரிக்க தமது குடிமக்களுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை ஒருவருக்கு மூன்று வீதம் கொள்வனரவு  செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.கனடாவில் 37 மில்லியன் குடிமக்களுக்கு 380 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.1388 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா 1800 மில்லியன் தடுப்பூசிகளுக்கு முன் ஒப்பந்தம் செய்துள்ளது.இலங்கைக்கு 2022 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற முடியுமான விதத்தில் தான் அட்டவடைப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையின் அதிஷ்டமாக தென் கிழக்காசி நாடுகளுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் விஷேட பிரதி நிதியாக எமது நாட்டவர் நியமிக்க்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து மூன்று இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்ப்பெறும்.உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் 20 % கிடைக்கும்,இவை இரண்டின் மூலம் 24 இலட்சம் மக்களுக்கு இதைப் பாவிக்கலாம்.இலங்கையின் மொத்த சனத் தொகை 210 இலட்சம்.இலங்கை தடுப்பூசிக் கொள்வனவுக்கு நிதி ஒதுக்காமல் இருக்கிறது. இலவசமாக கிடைக்கும் தடுப்பூசிகளைப் பெறுகிறது, மறுபுறம் உலக வங்கியிடம் கடன் கேட்கிறது.நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்ப்டதை பல ஆய்வுகள் நிறூபித்ததால் உலக வங்கி இன்னும் கடன் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.ஆனால் சீனியின் வரிக் குறைப்பினால் பெற்ற நிதிகள் யாருக்குச் சென்றன. சீனி வரிக்குறைப்பால் மாத்திரம் 1000 கோடி வருமானமாகப் பெற்றனர். மறுபக்கம் நிர்னயித்த விலையில் மக்களுக்கு சீனியும் கிடைக்க வில்லை.இந்த 1000 கோடியை சஜான் மெஹமட்டிற்கு கொடுக்காமல் தடுப்பூசிக்கு பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?தோங்காய் எண்ணையில் கொள்ளை அடித்தனர்.அதுவும் சஜான் மெஹமட் மூலம் தான்.இருக்கும் நிதிகளை வேறு தேவைகளுக்கு நண்பர்களுக்கு உழைக்க செலவிடுகின்றனர்.ஆனால் மக்களுக்கு தடுப்பூசி வழங்க நிதி இல்லை என்கின்றனர்.இது தான் இவர்களின் பெரிய தேசப்பற்று அரசாங்கம்.

இது சாதாரண கொள்ளை இல்லை.இது தெளிவான பகல் கொள்ளை.டொலர் இன்று 200 ரூபாவையும் தான்டி விட்டது.டொலரை கையாலத் தெரியும் என்று பெரிதாக பேசிய அஜித் நிவார்ட் கப்ரால் எங்கே என்று கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.