Header Ads



இலங்கையர்கள் அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் - Dr அனில்


புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை விட கோரோனா தொற்றுநோயை எதிர்ப்பதில் இலங்கையர்கள் அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவையின் முன்னாள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இன்று -01- தெரிவித்தார்.

விஞ்ஞான முறைகள் இருந்தபோதிலும், நாட்டில் சிலர் புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

தற்போதைய நிலையில் இலங்கையர்கள் புராணங்களைப் பின்பற்றாமல்,கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான விஞ்ஞான முறைகளைப் பின்பற்றவேண்டும். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை நாட்டில் சிலர் விஞ்ஞான முறைகளில் தங்கள் நம்பிக்கையை செலுத்துகின்றனர். எனினும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் பல அறிவியல் முறைகள் இருந்தபோதிலும், புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர் என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டுமானால் கொரோனா தடுப்பூசிகள் குறைந்தது 70வீதமான மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். உற்பத்தியாளர்கள் 20வீதமான தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள்.

உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை வாங்க முயற்சிக்கும். எனவே, இலங்கைப் போன்ற நாடுகள் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும், இதேவேளை தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விரைவுபடுத்த வேண்டும்.

இல்லையெனில் ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை கிடைக்காமல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது ஒரு தடையாக மாறிவிடு;ம் என்று வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. இஸ்லாம் என்பது வெறும் புராணங்களாலும் புனைக்கதகைளாலும் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமல்ல.இறைவனால் அருளப்பட்டதும் அவனுடைய தூதுவர்களால் காலத்துக்கு காலம் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டதாகும்.சரித்திர ஆதாரங்கள் இதற்கு சான்று பகின்றன என்பதை Dr.அனல் ஜயசிங்க அவர்கள் புரிந்து ககொள்ள வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதன் மரணத்தால் ஏற்படும் பூதவுடல்களை அடக்கம் செய்வதோ அல்லது எரிப்பதோ எவ்வித பாதிப்பும் உலகத்து இல்லை என உலக சுகாதார நறுவனம் எடுத்த முடிவும் அறிவியல் ரீதியானதும் விஞ்ஞான முறமைக்குட்பட்டதுமாகும் என்பதுடன் அது
    வெறும் புராண நம்பிக்கைகள் அல்ல என்பதையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. அறிவில்லாத நீயா அறிவைப் பற்றி கதைக்கிறது

    ReplyDelete
  3. இவரு பல அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பல அரசு வர்த்தமானிகளை இனவாத நோக்குடன் வெளியிட்டு விட்டு நாட்டையே குழப்பத்தில் தள்ளிவிட்டு இப்போது சுற்றாடலை பாதுகாக்க போய்விட்டார்

    ReplyDelete
  4. நீர் தானே வர்த்தமானி வெளியிட்டவர் உன்னால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு மனஉளைச்சல் தெரியுமா விஞ்ஞானம் தேவையென்றால் இஸ்லாத்தில் தேடுடா

    ReplyDelete
  5. You are person who went away from scientific truth and manipulated your decision over a night to satisfy extremists.

    ReplyDelete
  6. பேக்கப்பயலே விஞ்ஞானத்தை முதலில் நீ கடைப்பிடி

    ReplyDelete
  7. முற்போக்கானவர்களும் தைரியமாக கருத்துக்களை முன்வைப்போரும் குறைவடைந்துள்ளமையால் பிற்போக்குவாதங்கள் தலைவிரித்தாடுகிறது. எல்லா சமூகத்திலும் இது காணப்பட்டாலும் பெளத்த சமூகத்தில் மிக மிக அதிகமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.