Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் பெயரில், மாணிக்கக்கல் கோபுரம் - நிர்மாணப் பணி ஆரம்பம்


மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மாணிக்கக்கல் கோபுரத்தை இரத்தினபுரியில் அமைக்கும் திட்டம் இன்று -15- ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்நிகழ்வில் ஒன்லைன் ஊடாக இணைந்து கொண்டார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் இரத்தினபுரியில் மாணிக்கக்கல் கோபுரத்தை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த நான்கு வருடங்களில் மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண துறையின் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியசெலாவணியை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த மாணிக்கக்கல் கோபுரக் கட்டமைப்பில் அலுவலகங்கள், வர்த்தகக் கட்டடத் தொகுதிகள், வங்கி கட்டமைப்பு மற்றும் வாகன தரிப்பிடம் என்பன அடங்குகின்றன.

1 comment:

  1. நாட்டில் விவசாயம், சுகாதாரம்,கல்வி, பொருளாதாரத்துறையில் அததனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன். எஞ்சியிருப்பது மாணிக்கக்கல் கோபுரம் மட்டும்தா்ன்.அதைக் கட்டினால், வௌிநாட்டிலிருந்து மாணிக்க வியாபாரிகன் சாரிசாரியாக வருவாரகள்.கோபுரம் வியாபார மத்திய தளமாக மட்டுமன்றி வௌிநாட்டு வர்த்தகர்களின் தங்குநிலையமாகவும் செயற்படும என எதிர்பார்க்கப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.