Header Ads



கொரோனா தடுப்பூசியுடன் கட்டுநாயக்கவில் தரையிறங்கும் விமானம்


கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இந்தியாவின் தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

நாளை காலை 11 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசாங்கம் உதவியாக இலங்கைக்கு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவின் மும்பாயில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I 281 என்ற விமானத்தில் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது.

1,323 கிலோ கிராம் நிறையுடைய இந்த தடுப்பூசிகள் விசேட குளிர்சாதனத்திற்குள் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது

தரையிறக்கப்படும் தடுப்பூசி தொகையை விமான நிலையத்தில் உள்ள குளிர்சாதன களஞ்சிய அறைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.