கரம்பை,ஹுசைனியாபுரம் பகுதியில் வசித்த முகமட் ஸாலிஹு சித்தி சுபைரா என்பவர் மாரடைப்பினால் மரணமடைந்து இன்று நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில் அன்னாரின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து தற்போது நாடு திரும்பி முல்லைத்தீவு கோப்பாபிலவு இராணுவ முகாமில் தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில்,
இதனை அறிந்தவுடன் முல்லைத்தீவு இராணுவ தளபதியின் விஷேட பாதுகாப்பு வழிகாட்டலுடன் அழைத்து வரப்பட்டு மனைவியின் இறுதி கடமை பிரார்தனையில் கலந்துகொள்ளச் செய்துவிட்டு
தொற்றுநீக்கம் செய்து மீண்டும் முல்லைத்திவு தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார்.!
இதற்குரிய பாதுகாப்பு ஏனைய ஒழுங்குகளை முல்லைத்தீவு இராணுவ பொறுப்பாளர் கிராம அலுவலருடன் கலந்துரையாடி ,பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஒழுங்குபடுத்தி சிறப்பான முறையில் இதனை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் மேற்கொண்டமைக்காக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
(Youth News)
1 கருத்துரைகள்:
Salute...
Post a comment