Header Ads



அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு அனுப்பப்பட்டார் ரஞ்சன்


பிரபல நடிகரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொல பெலஸ்ஸவில் அமைந்துள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சனுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில், கொவிட் காரணமாக நீர்கொழும்பு, பல்லன்சேன தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிறைச்சாலையில் ரஞ்சன் தனது தண்டனைக் காலத்தை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.