January 30, 2021

"எமது தாய்நாட்டின் சுதந்திர தினத்தை, முஸ்லிம்கள் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்"


- Dr அரூஸ் ஷரிப்தீன் (நளீமி) ஆஸ்திரேலியா-

இலங்கையின் சுதந்திர தினம் எம்மை முன்னோக்கி வந்து கொண்டிருக்கும் இந்தத்தருணத்தில், முஸ்லிம்கள் எவ்வாறு இந்த தினத்தை கையாள வேண்டும் என்று பல ஓடியோக்களையும் போஸ்ட்களையும் கேட்க பார்க்க முடிந்தது. இந்த இடத்தில் இது பற்றிய எனது பார்வையை எழுதலாம் என்று நினைக்கிறேன். 

சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை அதனை நாங்கள் கொண்டாட வேண்டும் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர்.

என்னை பொறுத்த வரை, அடிப்படையை தெளிவாக விளங்கிக் கொண்டால், எமது முஸ்லீம் சமூகம் மிகவும் வெற்றிகரமான முடிவுகளை பெறமுடியும். 

தற்போது இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதனால் நாங்கள் இலங்கையில் ஒரு தேசிய கொண்டாட்டமாக கருதப்படும் சுதந்திர தினத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இலங்கையில் தற்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குரிய காரணம் தற்போதைய அரசாங்கத்தின் சில கொள்கைகளே. எனவே நாங்கள் அந்த அரச கொள்கைகளுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம் என்று சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை  ஒரு உசிதமான முடிவாக நான் பார்க்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் பிழையான சில கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் வேறு ஜனநாய வழிகளில் எதிர்ப்பை தெரிவிக்கலாமே தவிர தேசிய சுதந்திர தின கொண்டாடடங்களில் அவைகளை தொடர்பு படுத்துவது நல்லதல்ல.  

சுதந்திர தின கொண்டாட்டங்கள் தற்போது ஆடசியில் இருக்கும் அரசாங்கத்தின் பிரத்தியோக கொண்டாடடமல்ல, இது எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பிரதி வருடமும் இலங்கையர்களால் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். எனவே இலங்கையர்  என்ற அடிப்படையில் நாங்கள் அதனை ஒரு முக்கியவத்துவமுள்ள நிகழ்வாக கருதுவதில் தவறில்லை என்பது எனது கருத்து. 

இலங்கை முஸ்லிம்கள் இலங்கையர்கள். இலங்கைக்கு எவ்வளவோ பங்களிப்பு செய்திருக்கிறார்கள். எப்போதும் ஐக்கிய இலங்கைக்கு அதன் இறைமைக்கு பங்கம் ஏற்படும் எதனையும் செய்த வரலாறுகளே இல்லை.  தற்போதைய அரசாங்கத்தின் சில கொள்கைகள் நாளை அவர்களாலேயே  மாற்றப்படலாம்  அல்லது இதன் பிறகு வரும் அரசாங்கங்கள் அதனை மாற்றலாம். எனவே நாங்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து நாங்கள் இலங்கைக்கு சொந்தமில்லாதவர்கள் என்று ஒரு தவறான செய்தியை சொல்ல தேவையில்லை. 

இலங்கையின் சுதந்திர தினம் எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம். எமது மூதாதையர்கள் இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் இலங்கையர்களாக ஒரே அணியில் நின்று போராடி பெற்ற     சுதந்திரத்தை நாங்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாட முடியும்.

எங்களுக்குரிய  தற்போதைய நெருக்குவாரங்களுக்கும் இலங்கையின் சுதந்திர தினத்துக்குமிடையில் நாங்கள் எந்தவொரு தொடர்ப்பையும் ஏட்படுத்த தேவையில்லை. 4 கருத்துரைகள்:

Thanks for the writer for explaining difference of Independence celebration and government policy. I understand thowheed shytans are trying to give bad image for muslims by asking to put black flag with national flag. This is wrong and enemies of Islam say, we are not patriotic.

நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில் உங்கள் தர்க்கத்தின் பிரதிபலன் வெளிப்படும். இத் தர்க்கமானது தாங்கள் தற்போது வாழும் நாட்டுச் சூழலில் உள்ள மக்களின் மனவோட்டம் சார்ந்துள்ளமை புலப்படுகிறது. மண்டேலா அவர்கள் வெற்றி பெற்றதும் கால்பந்து வீரர்கள் வெள்ளையர்களால் வடிவமைக்கப்பட்ட உடைகளையும் விளையாட்டுக்கான கீதத்தையும் மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர் ஆனால் மண்டேலா அதனை மறுத்ததுடன் அது வெள்ளையர்களுடன் நாங்கள் இன்னும் பகையுடன் இருப்பதாகத் போய்விடும் எனவே அதனை மாற்றுவதில்லை என்றதுடன் கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றில் அந்த உடை அணிந்தவராக கீதம் இசைக்கப்படும் போது நடனம் கூட ஆடினார். வெள்ளையர்கள் அவரின் பெருந்தன்மையின் முன் அடிமையாகிவிட்டனர். பக்குவமான மக்களிடத்தில் அதன் தாக்கம் சாதகமாக அமைந்தது. இலங்கை சமூகத்தில் தாங்கள் சொல்வதனை பரீட்சார்த்தமாக செய்து பார்க்கலாம் அல்லது அத்தினத்தை கணக்கெடுக்காமல் விட்டு விடலாம். எதிர்க்கத்தேவையில்லை. இருந்த போதும் எதிர்ப்போருடன் சிறு குழுவினராவது சேர்ந்து கொள்வது என்பது கிலிகொள்ளச் செய்யலாம். எதிர்காலத்தில் அது பலமடைய விடாது பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையேற்படலாம்.

Absolutely Correct. Independence Day relates to the Country. We have NO Dispute with the country. Our problem is with those in Power now. Even some of the MPs on the Govt. side do NOT agree with those who are behind the Cremation Rule.

So, let us understand the Facts Correctly and do the Right thing by doing our duty by the Country and show those who want to Hurt us that we are LOYAL CITIZENS of Sri Lanka, instead of doing the Opposite which will be playing into their hands.

எனக்கென்டா இந்த விடயம் சமபந்தமா எந்தத் தெளிவும் இல்லை. நானும் பிறந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். முஸ்லிம்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை தங்களுடைய பெருநாளை எவ்வாறு கொண்டாடுவார்களோ அப்படித்தான் இது வரையும் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்தும் கொண்டாடி வருவர். ரோட்ல போற சாரைப் பாம்பினைத் தூக்கி உள்ளாடையினுள் போட்டமாதிரி தேவையில்லாத கட்டுரைகளையும் அதற்கு முன் பதிவு பின் பதிவு என்ற எதனையும் போட்டு மற்றவரகளின் உள்ளத்தில்' முஸ்லிம்களில் ஒரு சாரார் இலங்கையின சுதந்திர தினததை கொண்டாடுவதில்லை என்ற ஒரு மாயையை ஏற்படுத்த முனைய வேணடாம். கடந்த எத்தனையோ வருடஙகளாக முஸ்லிம்கள் எங்காவது சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்துள்ளார்களா? படிச்ச முட்டாப்பயல்களுக்கு ஒன்னு சொல்ல வேணும். எழுத ஏலும் என்பதற்காக எதனையும் எழுதுவதில்லை. முஸ்லிம்கள் சார்பாக அரசியல் பற்றி எழுதுவதாக இருந்தால் காலத்திற்கு ஏற்ற விதமாக எழுதுதல் வேண்டும்.இல்லாவிட்டால் எழுதாமல் விட்டு விடுவதே மேல்..

Post a comment