Header Ads



தப்பியோடும் கொரோனா நோயாளர்கள் தொடர்பில் தீர்வு காணுமாறு கோரிக்கை


(சி.எல்.சிசில்)

அரசாங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டினால் பொதுமக்கள் தாமதத்ததை சந்தித்து வருவதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உதவிச் செயலாளர் மருத்துவர் சமந்தா ஆனந்த தெரிவித்தார்

இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த மருத்துவர் ஆனந்த, இது தொடர்பில் எமது சங்கம் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது. இருப்பினும் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முடிவெடுப்பதில் தாமதமானது பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்துவதாகவும் இது ஒரு சிக்கலாக இருப்பதாகவும் அவர் மேற்கோள் காட்டினார்.

கொவிட்-19 தடுப்பூசிகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் இவ்வாறான தாமதத்தை அனுபவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். தடுப்பூசியை எங்கிருந்து இறக்குமதி செய்வது என்ற பிரச்சினை இன்னும் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தப்பிக்கும் கொவிட்-19 நோயாளர்கள் தொடர்பிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மருத்துவர் சமந்தா கூறினார்.

No comments

Powered by Blogger.