(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை சென்னல் கிராமம் ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி சுற்று மதில் கட்டுமானப்பணிக்காக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் (105,000.00) நிதியினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நேற்று (02) கையளித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் பிரதேச சபையின் ஏழு அமர்வில் கலந்து கொண்டதற்காக தனக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவையே இவ்வாறு வழங்கி முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
2 கருத்துரைகள்:
Hi
Kotupathai eraivanukku therivathaha koduthu nanmayai Kadai pidingal allah rahmath saivan
Post a comment