Header Ads



தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது அது தொடர்பான, தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டும்


இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம் அதிகரித்தால் அடுத்த இரு வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை -22- செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் தற்போது நாளொன்று 900 ஐ அண்மித்தளவில் தொற்றாளர்கள் பதிவாகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்போடு எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏதேனுமொரு வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசிகளையே பெற்றுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது அது தொடர்பான தீர்மானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றார்.

1 comment:

  1. when teh burial is denied un scientifically... why only this...

    Also take advice from racist who destroy the peace of the nation...

    ReplyDelete

Powered by Blogger.