Header Ads



ஆனந்தக் கல்லூரியின் பழைய,, மாணவர் என்ற அடிப்படையில்..!


ஜனாதிபதி கோட்டாபய ஆனந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்ற அடிப்படையில் சமகாலத்தவராக இருந்தபோது, ​​அப்போதைய பாடசாலை அதிபரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வது அவரது தற்போதைய நல்லாட்சியைத் தக்கவைக்க உதவும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 'மவ்பிம’ சகோதர மொழி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அன்மையில் அம்பாரையில் கூறிய கருத்து தொடர்பாக வினவியபோதே இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியின் அத்தகைய கருத்து ஒர் ஜனநாயக தலைவரால் கூற முடியுமான கருத்தாக அமைய முடியாது என்றும் அந்தக் கருத்து தொடர்பாக ஜனாதிபதி மீள் கருத்தொன்றை பதிவிடுவது உகந்தது என்றும் ஜனாதிபதியின் இத்தகைய ஏகாதிபத்திய கருத்துக்களால் இந்த அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏகாதிபத்திய கருத்துக்களையும், நடத்தைகளையும் இந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அங்கீகரிக்காததை வரலாற்று ரீதியாக நோக்கினால் புரிந்து கொள்ள முடியும் எனறும் தான் ஒரு ஆனந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்ற அடிப்படையில்  அப்போதைய பாடசாலையின் அதிபரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வது அவரது தற்போதைய ஆட்சியைத் தக்கவைக்க உதவும் என்றும் ஜனாதிபதியின் சில அன்மைய சில கருத்துக்கள் அவர் உன்மையில் அறிந்து தான் வெளிப்படுத்துகிறாரா அல்லது அறியாமல் இவ்வாறு கூறுகிறாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.