Header Ads



எவ்வளவு கெஞ்சியும், வாப்பாவின் முகத்தை காட்டாது எரித்து விட்டனர் - முஸ்லிம் குடும்பத்திற்கு அநீதி


(அஸீம் கிலாப்தீன் + நவமணி) 

நான் மும்மானையை சேந்த உமருள் பாருக்  என்பவரின் மகன் குளியாபிடிய வைத்தியசாலையில் எமது குடும்பத்துக்கு நடந்த அநியாயத்தை பதிவிடுகிறேன். 

இம்மாதம் 15 ஆம் திகதி எனது தந்தைக்கு நெஞ்சில் வருத்தம் ஏட்பட்டதால் எமது ஊரில் உள்ள, வைத்தியர் ஒருவரின் உதவியால் அம்பியூலன்ஸ் ஒன்றை   வரவழைத்து குளியாப்பிடிய வைத்திய சாலைக்கு எடுத்து சென்றோம். எனது தந்தை இருதய நோயாளி எனற காரணத்தினால்  அவருக்கு அருகில் ஒருவரை உதவிக்கு நிறுத்தினோம். நான் அங்கு சென்ற போது தந்தைக்கு ஆண்டிஜன் பரிசோதனையும் PCR உம்  எடுக்கப்பட்டிருந்தது ஆண்டிஜன் "நெகடிவ்" என்றும் PCR  முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வரும் என்றனர். தந்தைக்கு சிகிச்சை  அளிக்கபப்ட்டு நல்ல நிலையிலேயே  இருந்தார். அன்று இரவு 12 மணியளவில் மீன்டும் நெஞ்சில் வருத்தம் எற்பட்டு  சிகிச்சை  அளிக்கப்பட்டார். மீண்டும் 2 மணியளவில் வருத்தம் கூடியதால்  அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வயர்களை கலட்டி  வீச முற்பட்டார்  கதறினார்.   அதிகாலை 4 மணியளவில் அவருக்கு ஊசி ஒன்று ஏற்றப்பட்டது . பின்னர் சில நிமிடங்களில் அவரின் உயிர் பிரிந்தது.  அவரை பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி அதிகாலை 7 மணியளவில் பிரேத அறைக்கு கொண்டு சென்றனர்.

நான் அன்று மாலை 4 மணியளவில் வைத்திய சாலையில் இருந்தேன். என்னை ஏதாவது ஒரு வாகனத்தில் வீடு செல்லுமாறு கூறினார்கள்.   எனது உறவினர் ஒருவருக்கு அறிவித்து அவருடன்  வாகனம் ஒன்றில் வீடு சென்றேன். அதே நாள் 6 மணியளவில் எங்கள் குடும்பத்தில் இருவருக்கு அல்லது நால்வருக்கு தந்தையை பார்க்க அனுமதிக்கப்படும் என்று  கூறினர்.  அவர்கள் அனுப்பிய அம்பியூலஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு சென்றோம். நாங்கள் அங்கு சென்ற போது பெட்டி  எங்கே காசு கொண்டுவரவில்லையா? என்று கேட்டுவிட்டு 58000.00 ரூபாய் பணம்  தருமாறு கேட்டனர் அப்போது  தான் சொன்னார்கள் அவருக்கு பொசிடிவ் என்று எங்களுக்கு அது வரை எதுவுமே தெரியாது. எங்களிடம் நிறைய விடயங்களை கேட்டு விட்டு , அசச்சுருத்தல் போன்று கதைத்தனர். எங்களை கையொப்பம் இடுவதக்கு பலவந்ததப்படுத்தினர். நாங்கள் அதனை செய்யவில்லை அதனாலே எங்கள் குடும்பத்தை பற்றி ஊடகங்களில் பிழையான செய்தியை பரப்பினர். நாங்கள் வாப்பாவின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல வலியுறுத்தியதாகவும் பொய்களை பரப்பி உள்ளனர். 

குளியாப்பிடிய வைத்தியசாலைக்கு வாப்பாவை ஏற்றி  சென்ற  போது  எம்மிடம் சத்திய வாக்கு ஒன்றை எடுத்து இருந்தார் " என்னை எந்த காரணம் கொண்டும் எரித்து விட அனுமதிக்க வேண்டாம் " என்கிறார். 

அதனால் தான் நாங்கள் கையெழுத்திடவில்லை, நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் வாப்பாவின் முகத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை.

எனது சகோதரி ஒருவர் லொக்டவுன் காரணமாக 15 நாட்களுக்கு மேல் வாப்பாவை பார்க்கவில்லை, அவரும் எவ்வளவு கெஞ்சியும் பார்க்க முடியவில்லை. இரவு 11 மணி வரை அங்கு நின்றுவிட்டு வீட்டுக்கு வந்தோம் அவர்கள் மிரட்டியது எல்லாம் கையப்பம் இடுவதற்கு மாத்திரமே, ஆனால் ஊடகங்களில் பிழையான செய்தியே வந்தது.

அடுத்த நாள் காலை PHI  யின் பொலிஸ் அதிகாரியும் வீடு வந்து கையொப்பம் வாங்க முயற்சித்தனர் கையப்பம் தராவிட்டால்  சட்டத்தின் படி எரிப்போம் என்றனர். இவர்களின் மிரட்டல் தொடர்பாக வீடியோ கிளிப் எங்களிடம் இருக்கிறது .

ஆனால் அவர்கள் கையொப்பம்  வாங்க வருவதற்கு முன்னரே வாப்பாவை எரித்து விட்டதாக தான் அறிந்தோம் .

இது தான் உண்மை

4 comments:

  1. Dear brothers, send the video to UN AND WHO,,, Let the world know haw inhuman are these governement and health aurthority ?

    Raise your hand with us to Allah, Asking to punish and errase this inhumans from this land and punsh them in hell for ever after their death.

    ReplyDelete
  2. Every action has a reaction according to Newton 's law
    Let the time decide these inhuman acts
    Allah kareem

    ReplyDelete
  3. Bring this gross human right violation to UN & ICC

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னி இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவருக்கு பீஸபீல் மௌத்தாக ஏற்றுக்கொள்வானாக.ஆமீன். இனவாதத்துக்கு அப்பால் வேறு ஒரு சதி அரங்கேறுகிறது.அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக் கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன்.அல்லாஹ் போதுமானவன்.நியாஸ் இப்றாகிம்

    ReplyDelete

Powered by Blogger.