Header Ads



இலங்கையர்களுக்கு தமது நாட்டு, ஊசியை ஏற்ற வேண்டுமென சீனா பிடிவாதம் – இந்திய ஊடகம் தகவல்


சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவைரஸ் மருந்தினை இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என சீனா இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் மருந்தினை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் பின்னரே சீனா இந்த அழுத்தத்தினை கொடுக்க ஆரம்பித்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எகனமிக்ஸ்டைம்ஸ் இந்தியா டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது

சீனா தனது சைனோபார்ம் கொரோனா வைரஸ் மருந்தினை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

தங்கள் மருந்தின் திறமையையும் சில நாடுகள் தங்கள் மருந்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டி சீன தூதரகம் ராஜபக்ச அரசாங்கம் தங்கள் மருந்திற்கு அனுமதி வழங்கவேண்டும் என அழுத்தங்களை கொடுப்பதாகஇந்த விடயம் குறித்து நன்கு அறிந்த தரப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தடுப்புமருந்து இராஜதந்திரம் காரணமாக சீனா பின்னடைவை சந்தித்துள்ளது எனவும் அந்த தரப்புகள் தெரிவித்தன

சீனாவின் மருந்தினை பயன்படுத்திய சில தலைவர்களின் பெயர்களையும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சீனா இதன் மூலம் தனது மருந்தின் திறமையை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா இலங்கைக்கு தனது கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கியுள்ளதை தொடர்ந்தே சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது என கொழும்பினை தளமாக கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

5 comments:

  1. ஜப்னா முஸ்லீம்:உங்களின் வாசகர்களின் பழைய வாசகர்கள் நிறைய பேர் உண்டு அதில் நானும் ஒருவன் நீங்கள் கட்டுரைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கருத்து பதிவு செய்பவர்களுக்கும் கொடுக்கணும்!அதுதான் ஊடக தர்மம் வாசகரின் கருத்துக்கள் நிராகரிக்க படுமென்றால் கட்டுரை பதிய கூடாது ஒருவர் சமூகத்துக்கும் இனத்துக்கும் செய்யப்பட்ட அநியாயத்தை நியாய படுத்தி கருத்து சொன்னால் அதட்கு எதிர் கருத்து சொல்ல இடமளிக்க வேண்டும் நான் இங்கு சொல்ல வரும் விடயம் நூர் நிசாம்(Noor Nizam)என்று ஒரு பைத்தியக்காரன் கருத்து சொல்வான் அவன் கருத்து அநேகமான வாசகர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏட்படுத்தும் இது உங்களுக்கும் நன்கு தெரியும் அவன் சொல்லும் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் ஏன் அதட்கு எதிர் கருத்து சொல்லும் வாசகர்களின் கருத்தை நிராகரிக்கிறீங்கள்?அவன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்கிற எல்லாம் வாசகர் கருத்தை அதிகமான தடவை நீங்கள் பதியவில்லை இத்தனைக்கும் நீங்கள் பத்து வருடத்துக்கு மேல் செய்கின்ற சேவை வெற்றிகரமாக போக வாசகர்கள் தான் என்று சொல்கிறீர்கள் அந்த நூர் நிசாம்(Noor Nizam) ஒன்று உங்கள் ஊர் யாழ்ப்பாணம் ஆக இருக்கனும்,இல்லை உங்கள் உறவினர்,நண்பராக இருக்கனும் அதுதான் அவன் அரசுக்கு கூஜா தூக்கி ஜனாசா எரித்தது சரி என்று சொல்வது போல் கருத்து சொன்னாலும் நீங்கள் அவன் சொல்வதுக்கு அதிகம் முக்கியம் கொடுக்குறீங்க இதுவா உங்கள் ஊடக தர்மம்?

    ReplyDelete
  2. Its better than Indian copied oxford vaccine....why india gave cz of the port...

    ReplyDelete
  3. Kalugu என்பது யாரென்று எமக்குத் தெரியாது. ஆனால் அவர் கூறவேண்டியதைச் சரியாகக் கூறியுள்ளார்.நூர் நிசாம் என்ற பேயன் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கி முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வீணாப்போன ஒருவன். தயவு செய்து அவனுடைய வண்டவாளங்களை இங்கு பிரசுரித்து ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் தரத்தைக் குறைக்க வேண்டாம் என நான் பலதடவைகளில் இங்கு எழுதியுள்ளேன். இதன்பிறகாவது சத்தியத்தைக்கூறும் போது சற்று செவிசாய்த்துக் கேளுங்கள் என பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். சகோதரரின் கருத்துக்கு மிக நன்றிகள்.

    ReplyDelete
  4. sinopharm is very good vaccine 100 % better then oxford Astra senica

    ReplyDelete
  5. @KALUGU Yes. அவன் பந்தி பந்தியா எழுதி சொம்பு தூக்கினான். இப்ப சத்தத்த காணல்ல.

    ReplyDelete

Powered by Blogger.