Header Ads



கோமாளித்தனமான செயற்பாடுகளால், மனவேதனை அடையும் மாணவர்கள்



- ஹைதர் அலி -

உலகம் முழுக்க பரவிவரும் Covid - 19  தொற்று காரணமாக முழு உலகமும் இஸ்தம்பிதம் அடைந்து இருக்கும் இக்காலகட்டத்தில், இந்த நோய் தொற்றில் இருந்து வெளிவருவதற்கு உலகம் பல பில்லியன் ரூபாய்களை செலவளித்து ஆய்வுகளையும் மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

ஒருவருக்கு இந்த கொரோனா நோய் தொற்றியிருந்தால் அவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு 7நாளைகுள் மற்றவர்களுக்கு பரவும்.  ஆனால் 7நாளைக்கு பிறகு ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் இன்னும் ஒருவருக்கு பரவாது என்கிறது உலக சுகாதார  இஸ்தாபனம். இந்த நடைமுரையை முழு உலகமும் கடைபிடித்து வருகிறது.. 

ஶ்ரீலங்காவில் மாத்திரம் 14நாட்கள் Corantine என்றும் ஒவ்வொரு ஊர் ஊராக மக்களை அச்சமூட்டும் செயல்களை அரசு செய்துவருகிறது , இதனைப்பற்றி நான் இங்கு நான் விபரிக்க வரவில்லை... அது  இலங்கை அரசு ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரளில் செயதுவருகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். 

அவ்வாறான ஒரு கல சூழ்நிலையில் பலாங்கொடை நகரிலும் சிலர் தனிமைப்பத்தலுக்கும் , வீடுகள் முடக்கத்துக்கும் உற்படுத்ப்பட்டன...

இப்படியான  தனிமைப்படுத்தல் காலமும்,  வீடுகள் முடக்க காலமும் முடிவந்து விட்டது என்றும், உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாம்  என்று PHI மற்றும் வைத்திய அதிகாரிகள் அறித்தன் பின்னர் பெற்றோர்கள் மேலும் ஒருவாரகாலம் தங்களது சுய விருப்பத்தின் பெயரில் பிள்ளைகளை வீடுகளில்  வைத்திருந்து விட்டு இன்று பாடசாலை அனுப்பி வைத்திருகிறார்கள். 

இவ்வாறு தனிமைபடுத்தல் காலத்தை 28 நாட்கள் பூர்த்தி செய்து தமக்கு எந்த ஒரு நோயும் இல்லை என்று PHI மற்றும் மருத்துவ துறை அறிவித்ததன் பின்னர் பிள்ளைகள் இன்று  -25- பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலைக்கு சென்றதும்  அதிபர் ஆசிரியர்களால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். .....

 இந்த செயற்பாட்டை பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வந்தது ஒர் இரு வருடங்களுக்கு முன்னர் குருநாகளை பகுதியில் ஒரு தாய்கு HIV தொற்று என்றதும் மகளை பாடசாலையில் இருந்து விரட்டிய ஆசிரியர்களையும் அதிபரையும் , இப்படி ஒரு முட்டாள் தனமான பாடசாலை சமூகத்தை தான். 

இந்த நோய் தொற்று சம்பந்தமாக மக்கள் மத்தியில் இருக்கும் Stigmaவை போக்க  விஞ்ஞான ரீதியானதும் , அறிவு பூர்வமான கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துவைத்து மக்களுக்கு தெளிவு படுத்தி உண்மைகளை புரியவைக்க வேண்டிய பாடசாலைகளே (அதிபர் , ஆசிரியர்களே ) தனிமைப்படுத்தல் மற்றும் முடக்க காலம் முடிவடைந்து பாடசாலை திரும்பும் மாணவர்களை (Discrimination )  பாகுபாடு காட்டி திருப்பி அனுப்பியது கண்டிக்ப்பட வேண்டிய சம்பவமாகும். 

No comments

Powered by Blogger.