Header Ads



அலி சப்ரிக்கு கண்டனம், உடனடியாகக் கைதுசெய்ய கோரிக்கை


மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர். 

கொழும்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில், எதிர்ப்பு  யோசனையையும் நிறைவேற்றி உள்ளதாகஇ அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர், நீதிமன்ற வைத்தியர் அசேல மென்டிஸின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கை நீதிமன்ற வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் சுயாதீன மரண நிர்வாகச் செயற்பாடுகளில் தேவையற்ற  தலையீடு மற்றும், சுகாதார அமைச்சால் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அகற்றுவது குறித்து நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் அமைச்சரின் செயற்பாட்டை, நீதிமன்ற வைத்திய நிறுவனத்தின் வைத்தியர்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சர் அலி சப்ரியை அப்பதவியில் இருந்து உடனடியாகப் பதவி நீக்கி, கைதுசெய்ய வேண்டுமென உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். 'ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிக்காது விட்டால், முஸ்லிம் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பர்' என நீதியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த அறிவிப்பானது பாரதூரமானது என்பதால், அமைச்சர் அலி சப்ரியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்' எனவும் சுமங்கள தேரர் கோரியுள்ளார்.  


4 comments:

  1. சிறுபான்மையின் ஒற்றுமையும் சிறுபான்மைக் கட்சிகளின் அவசியமும் கற்றறியாவிட்டாலும் பட்டறிந்து கொண்டிருக்கின்றார். அவர் எதிர்காலத்தில் சிறுபான்மையினருக்கு உதாரண புருசராகவும் சிறுபான்மையினரின் ஒற்றுமை பற்றிப் பேசுவதற்கு தகைமை கொண்டவராகவும் ஆகிவிட்டார். பெரும்பான்மையின் அடக்கு முறையை அறியாத புதிய தலைமுறைக்கு தமிழர் போராட்டம் ஏன் ஏற்பட்டது என்ற பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு கற்றல் சம்பவங்கள் அடுக்கடுக்காக வரப்போகிறது. அதிலிருந்தும் சிறுபான்மையினர் கற்றுக் கொள்ளாவிட்டால் இலங்கையில் ஒரே ஒரு இனம் ஒரே ஒரு மொழி வாழும்.

    ReplyDelete
  2. ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகின்றேன். ஒரு முறை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் "வீர தீர சாகசம்" நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முஸ்லிம்களுல் ஒரு சிலர் அரசுக்கு ஆதரவாகக் குடை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்த முஸ்லிம் தரப்பை நோக்கி அந்தத் தலைவர் கூறினார்கள். இன்று தமிழர்கள் பல வழிகளிலும் நசுக்கப்படுகின்றனர் முஸ்லிம் தலைவர்கள் வாய் பொத்தி மௌனம் காக்கின்றனர். இன்னோரு நாள் வரும். அன்று முஸ்லிம்கள் எங்களைவிட அதிகம் நசுக்கப்படுலார்கள். அப்போது தமிழினம் அதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிராது. என்றார். என்ன ஒரு தீர்க்கதரிசனம். இப்போது இவை இரண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் ஆர்வத்துடன் அல்லது சந்தோசத்துடன் பர்த்துக்கொண்டிருக்கவில்லை. வடகிழக்கில் வாழ்ந்த, வாழ்கிற வர்களுக்குத் தெரியும் கிட்டத்தட்ட 1986 வரை பெரும்பான்மையான வடகிழக்கு முஸ்லிம்கள் தமிழ் சகோதரர்களுடன் கைகோர்த்தே இருந்தனர். எப்போது ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து கடத்தல் கப்பம் கொலை போன்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்தது மட்டுமல்லாது ஈழம் எங்கள் தாயகம் நீங்கள் வந்தேறு குடிகள். நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் நொடிப்பொழுதில் உங்களை வேருட்டியடிப்போம் என்றெல்லாம் பகிரங்கமாகப் பெசத்தொடங்கி கினார்களோ அதிலிருந்துதான் வேதனையுடன் விலக ஆரம்பித்தனர்.
    இப்போதுகூட உண்மையை எடுத்துக்கூற வேண்டுமென்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறேனே தவிர குரோதத்துடன் அல்ல. நான் எப்போதும் தமிழ் சகோதரர்களை நேசிப்பவன்...

    ReplyDelete
  4. ஆழமரியாமல் காலை விட்டார். ஆற்றில் உள்ள சேற்றில் கால் புதைகிறது.

    ReplyDelete

Powered by Blogger.