Header Ads



எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு, 300 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


(வாஸ் கூஞ்ஞ) 

கொரோனா 19 தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்;ததைதத் தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மன்னார் எருக்கலம்பிட்டி கிராமம் தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இருந்தபோதும் முன்னூறு பேர் தனிமைப்படுத்;ததப்பட்ட நிலையில் வைக்;கப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பபாளர் வைத்தியகலாநிதி த.வினோதன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருகை தந்;த ஒரு குடும்பஸ்தரிடம் கொரோனா தொற்று இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டியில் தங்கியிருந்த அவ் நபரின் குடும்பத்தினரிடம் கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவ் குடும்பத்தினரிடம் ஐந்து நபர்களுக்கு கொரோனா 19 தொற்று நோய் இனம் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து அன்றிலிருந்து இவ் கிராமத்தின் ஐந்து கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் இவ் கிராமத்தில் மூன்று தினங்கள் 298 நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இதில் 202 பேருடைய முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெற்றதில் கொரோனா தொற்றுக்கு உள்ளான குடும்ப உறவினர்கள் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரைக்கும் ஏழு பேருக்கு எருக்கலம்பிட்டியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பகுதியில் தற்பொழுது 300 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ்; கூஞ்ஞ)  

No comments

Powered by Blogger.