Header Ads



20 நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் - உயர் நீதிமன்றத்தில் நாளை வாதம்


- காதிர்கான் -

   இருபது நாள் குழந்தையின்   ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில்  தகனம் செய்ததற்கு  எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

   முன்னாள் அமைச்சர்,  சிரேஷ்ட ஐனாதிபதி சட்டத்தரணி  பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானாக முன் வந்து மனுத்தாக்கல்  செய்து, தானே நீதிமன்றில் இவர்  ஆஜராகவுள்ளார்.

    மரணித்து இருபது நாட்களேயான  குழந்தையின்   ஐனாஸாவை  (தகனம்)  எரித்ததற்கு எதிரான இந்த உச்ச நீதிமன்ற வழக்கு, (22) வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

   சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி  முன்னாள் அமைச்சர்  பைஸர் முஸ்தபா தலைமையிலான  சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய  குழுவினர், குறித்த வழக்கில் வாதிடவுள்ளனர்.  

   இருபது நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணி்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Verdict may have been written already on the orders from higher ups.

    ReplyDelete

Powered by Blogger.