Header Ads



2 தடவைகள் PCR செய்தும், மொயீன் அலிக்கு கொரோனா இல்லை - இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை


இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது. 

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனால் அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. தப்பினோம் பிழைத்தோம், பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிடு அலியே... இல்லையில் உனக்கும் வைக்கப்படும் தீயே!

    ReplyDelete
  2. Yaaro oru srilankan scientist sonnane...ivarthaan puthiya virusuk sonthakkaaren endu??? kevalamaana polappu!!!

    ReplyDelete

Powered by Blogger.