Header Ads



கொவிட் 19 தேசிய முஸ்லிம் செயலணி ஆரம்பிப்பு...!


ஜனாசா எரிப்பு விவகாரத்திலே முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் ஆரம்பம் முதலே மேற்கொண்டு வரும் கவனஈர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இலங்கை இஸ்லாமிய மையம் (Islamic Center) மற்றும் சிவில் ,சமூக அமைப்புக்கள் , மற்றும்  சமூக ஆர்வலர்களுடன் இணைந்து COVID 19 தேசிய முஸ்லிம் செயலணியை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட உள்ள குறித்த வேலைத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்படுத்தப்பட உள்ள நிலையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான கொழும்பு மாவட்டத்திலே முதற் கட்டமாக தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு இஸ்லாமிய நிலைய கட்டடத்தில் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவரும்- முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மட் அவர்களது மகனுமான  ஹுஸைன் முஹம்மட் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களது பங்கேற்புடன் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது தலைமையில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது...

குறித்த முயற்சி வெற்றியடைய வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.

3 comments:

  1. செயலணி என்ற பதத்தின் கருத்து இங்கு கலந்து கொள்ளும் யாருக்கும் விளங்கியவர்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. Go to UN, Geneva and prosecute the government. Forced cremation is a crime against humanity.

    ReplyDelete

Powered by Blogger.